வழிபாடு

தேரூர் மகாராஜபுரம் சந்தனமாரியம்மன் கோவில் கொடை விழா நாளை தொடங்குகிறது

Published On 2023-05-17 12:39 IST   |   Update On 2023-05-17 12:39:00 IST
  • கொடை விழா நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
  • 20-ந்தேதி சாமிமார்கள் ஊர் சுற்றிவரும் நிகழ்ச்சி நடக்கிறது.

தேரூர், மகாராஜபுரம் சந்தனமாரியம்மன் வங்காரமாடசாமி கோவில் கொடை விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. நாளை இரவு 7 மணிக்கு வில்லிசை, 12.30 மணிக்கு குடியழைப்பு நடக்கிறது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு கும்பம் தரித்து வருதல், 11 மணிக்கு களபம் சாற்றுதல், அபிஷேகம், மதியம் 12.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, 2 மணிக்கு சமபந்தி விருந்து, நள்ளிரவு 1.30 மணிக்கு நீராட செல்லுதல், 2 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.

20-ந் தேதி மதியம் 12 மணிக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு மஞ்சள் நீராடுதல், பகல் 1.30 மணிக்கு பூ படைப்பு, உச்சி கொடை, மாலை 5 மணிக்கு சாமிமார்கள் ஊர் சுற்றிவரும் நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.

Tags:    

Similar News