வழிபாடு

பிளாஞ்சேரி கைலாசநாதர் கோவிலில் பவுர்ணமி ஜெயமங்களா யாகம்

Published On 2022-11-08 09:26 GMT   |   Update On 2022-11-08 09:26 GMT
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
  • சரப சூழினிக்கு தீபாராதனை நடைபெற்றது.

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் பிளாஞ்சேரியில் காமாட்சி கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு தனி சன்னதி கொண்டு அஷ்ட பைரவர்கள் சூழ சரபசூழினி அம்மன் அருள் பாலிக்கிறார். நேற்று பவுர்ணமியையொட்டி சரபசூழினி அம்பாளுக்கு ஜெயமங்களா யாகம் நடைபெற்றது.

பரம்பரை அறங்காவலர் சரப சூழினி உபாசகர் எஸ். நாகராஜ சிவாச்சாரியார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் பூஜைகளை செய்தனர். மகா தீபாராதனையை தொடர்ந்து சரப சூழினி சன்னதிக்கு எடுத்துவரப்பட்ட புனித நீரால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சரப சூழினிக்கு தீபாராதனை நடைபெற்றது.

ஜெயமங்களா யாகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். யாக ஏற்பாடுகளை ஆலய அர்ச்சகர் என். கண்ணன் குருக்கள் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News