ஆன்மிகம்
அம்மன் வழிபாடு

கோவில்களில் ஆடித்திருவிழா ரத்து

Published On 2020-07-16 04:37 GMT   |   Update On 2020-07-16 04:37 GMT
புதுச்சேரியில் உள்ள கோவில்களில் ஆடித் திருவிழாவை ரத்து செய்து இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்பு துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி அரசு இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்பு துறை ஆணையர் சிவசங்கரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஆணைகள் மற்றும் வழிகாட்டுதல்களை கோவில்களில் பின்பற்றும்படி புதுச்சேரி அரசு இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்பு துறை சார்பில் நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் பல்வேறு கோவில் நிர்வாகங்கள் ஆடித்திருவிழா, தீமிதி விழா மற்றும் ஒருசில தேர்த்திருவிழா போன்றவைகளை நடத்துவது தொடர்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டும் மேலும் சில முக்கிய ஆகம விதிகளை பின்பற்றும் பொருட்டும் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் வரும் அனைத்து கோவில்களிலும் மறு உத்தரவு வரும் வரை அனைத்து திருவிழாக் களும் ரத்து செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

அன்றாட பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இன்றி தற்பொழுது உள்ள முறையில் நடைபெற வேண்டும். திரு விழாக்களின் முக்கிய தினங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட குருக்கள் சிறப்பு பூஜைகள் போன்றவைகளை உரிய சமூக விலகல் விதிமுறைகளை பின்பற்றி மேற்கொள்ளலாம். அதற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதியில்லை. உபயதாரர்கள் பெயரில் பூஜை செய்தால் 5 நபர்களுக்குள் மட்டுமே அனுமதி. கோவில் நிர்வாகத்தினர் மூலவர் சன்னதிகளை தவிர்த்து மற்ற பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளை நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யலாம்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News