ஆன்மிகம்
திருக்காஞ்சி கோவிலில் சிறப்பு யாகம்

திருக்காஞ்சி கோவிலில் சிறப்பு யாகம்

Published On 2020-07-01 10:24 IST   |   Update On 2020-07-01 10:24:00 IST
வில்லியனூர் அருகே உள்ள திருக்காஞ்சி கங்கவராகநதீஸ்வரர் கோவிலில் வேதபுரி ஆதிசைவ சிவாச்சார்யார்கள் சேவா சங்கம் சார்பில் அரசு வழிகாட்டுதலின்பேரில் மகா மிருத்யுஞ்ஜெயர் சிறப்பு யாகம் நடைபெற்றது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவாமல் இருக்கவும், மக்கள் நலன் வேண்டியும் வில்லியனூர் அருகே உள்ள திருக்காஞ்சி கங்கவராகநதீஸ்வரர் கோவிலில் வேதபுரி ஆதிசைவ சிவாச்சார்யார்கள் சேவா சங்கம் சார்பில் அரசு வழிகாட்டுதலின்பேரில் நேற்று மகா மிருத்யுஞ்ஜெயர் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் அதிகாலையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. ஏராளமான சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு வேத மந்திரங்களை முழங்கினர்.

யாகத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், சுகுமாறன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு வழிபட்டனர். இதில் இந்து அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன், கோவில் தனி அதிகாரி சீத்தாராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Similar News