ஆன்மிகம்
திருநள்ளாறு தர்பாராண்யேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடைபெற்றபோது எடுத்த படம்.

திருநள்ளாறு கோவில் பிரம்மோற்சவம் தொடங்கியது

Published On 2019-05-30 06:42 GMT   |   Update On 2019-05-30 09:49 GMT
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் பிரசித்திபெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிபகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கோவில் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் ஏற்றப்படுவதற்காக சிவ கொடி கோவிலின் நான்கு வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டது. பிறகு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, தீபாராதனை நடைபெற்றது.

விழாவில், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமி, கோவில் நிர்வாக அதிகாரி சுந்தர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூன் 5-ந் தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு வீதி உலா, ஜூன் 12-ந் தேதி காலை தேரோட்டம், 14-ந் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான விக்ராந்த் ராஜா தலைமையில் நிர்வாக அதிகாரி சுந்தர் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News