ஆன்மிகம்
ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி காவிரி ஆற்றில் இருந்து வெள்ளி குடங்களில் புனிதநீர் எடுத்து வரப்பட்டபோது எடுத்த படம்.

உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம்

Published On 2018-07-21 04:04 GMT   |   Update On 2018-07-21 04:04 GMT
திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி நேற்று காலை பட்டர்கள் கோவிலில் இருந்து வெள்ளி குடங்களுடன் காவிரி கரைக்கு புறப்பட்டனர். காவிரி நீர் அடங்கிய குடங்களை யானைமீது வைத்து அமர்ந்த படி கோவிலுக்கு வந்தனர்.

மேளதாளங்கள் முழங்க திருமஞ்சன குடங்கள் கோவிலை அடைந்ததும் காலை 10.30 மணி அளவில் அங்கில் ஒப்புவித்தல் நிகழ்ச்சி நடந்து. மாலை 3 மணி அளவில் அங்கில் சுத்தம் செய்து ஒப்படைக்கப்பட்டது.

இதனையொட்டி நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. மாலை 5 மணிக்கு மேல் மங்கள ஆரத்தி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று (சனிக்கிழமை) திருப்பாவாடை உற்சவம் நடைபெற உள்ளது.

இதையொட்டி காலை 7 மணிக்கு மடப்பள்ளியில் இருந்து தளிகை போடுதலும், காலை 10.45 மணிக்கு தளிகை அமுது செய்தலும், காலை 11 மணிக்கு திருப்பாவாடை கோஷ்டி மற்றும் பிரசாதம் வினியோகம் நடைபெற உள்ளது. பக்தர்கள் பொதுஜன சேவைக்கு காலை 11 மணி முதல் 12 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News