ஆன்மிகம்
தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்ட போது எடுத்த படம்.

திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் தொடங்கியது

Published On 2018-05-12 03:35 GMT   |   Update On 2018-05-12 03:35 GMT
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள பிரணாம்பிகை சமேத தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உலக புகழ்பெற்றது. இக்கோவிலில் சனிபகவான் தனியாக சன்னதிகொண்டு அருள்பாலித்து வருகிறார். சனிதோஷ பரிகார தலமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடத்தப்படம். இந்த ஆண்டு பிரம்மோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிகம்பத்தில் ஏற்றப்படும் சிவகொடி கோவிலின் நான்கு வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் சிவாச்சாரியார்கள் கொடியை ஏற்றி சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

இந்த விழாவில், கோவில் நிர்வாக அதிகாரி விக்ராந்த்ராஜா, கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த பிரம்மோற்சவத்தில், வருகிற 18-ந் தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லாக்கில் வீதி உலாவும், 25-ந் தேதி காலை தேரோட்டமும், 26-ந்தேதி இரவு சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதி உலாவும், 27-ந் தேதி தெப்ப உத்சவமும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி விக்ராந்த்ராஜா தலைமையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 
Tags:    

Similar News