முக்கிய விரதங்கள்

குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும் வசந்த பஞ்சமி விரதம்

Update: 2023-01-26 03:56 GMT
  • டும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் நீடிக்கும்.
  • மன்மதன் ரதிதேவி பூஜை மிகவும் பயனுள்ளதாக அமையும்.

தை மாத சுக்லபஞ்சமிக்கு ஸ்ரீ பஞ்சமி வசந்த பஞ்சமி என்று பெயர். இன்று விரதம் இருந்து மல்லிகைப்பூவால் மகாலட்சுமியுடன் மகா விஷ்ணுவையும் ரதி தேவியுடன் மன்மதனையும் படத்திலோ விக்ரகத்திலோ பூஜை செய்து பலவித பலகாரங்களுடன் நிவேதனம் செய்ய வேண்டும்.

சங்கீதம் நர்த்தனம் நாம சங்கீர்த்தனம் ஆகியவற்றால் அனைவரையும் குறிப்பாக புதிதாக திருமணம் ஆன தம்பதிகளை மன்மதன் ரதி தேவியாக பாவித்து அவர்களுக்குத் தேவையானவற்றை வாங்கித் தந்து சந்தோஷப்படுத்த வேண்டும்.

கணவன்- மனைவி இருவரும் ஒருவருக் கொருவர் அன்பாக இருக்க இன்று விரதம் இருந்து செய்யும் மன்மதன் ரதிதேவி பூஜை மிகவும் பயனுள்ளதாக அமையும். குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் நீடிக்கும்.

Tags:    

Similar News