ஆன்மிகம்
வராஹி அம்மன்

தடைகள் தீர்க்கும் பஞ்சமி விரத வழிபாடு

Published On 2021-10-25 01:36 GMT   |   Update On 2021-10-25 06:26 GMT
பஞ்சமி திதி நாளில், வராஹிதேவியை விரதம் இருந்து வழிபடுங்கள். எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கி, காரியங்களில் வீரியத்தைக் கொடுப்பாள். வெற்றியைத் தந்தருள்வாள்.
சப்த மாதர்களில் வாராஹி தேவியும் ஒருவர். இந்த ஏழுதேவியரிலும் காரியத்திலும் வீரியத்திலும் மகாசக்தி எனப் போற்றப்படுகிறாள் வாராஹிதேவி. பஞ்சமி திதி என்பது வாராஹி தேவியை விரதம் இருந்து வணங்குவதற்கு உரிய அற்புத நாள். பஞ்சமி திதியில் வாராஹிதேவியை மனதார வழிபட்டால், எதிர்ப்புகளையெல்லாம் துவம்சம் செய்வாள். தீயசக்திகளை அடித்து விரட்டுவாள். நம்முடைய அனைத்துச் செயல்களிலும் துணையிருந்து நம்மைக் காத்தருள்வாள்.

வாராஹிதேவிக்கு, பூண்டு கலந்து, தோல் நீக்காத உளுந்த வடை நைவேத்தியமாகப் படைப்பது ரொம்பவே விசேஷம். நவதானிய வடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம் என ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்தால், குளிர்ந்து போவாளாம் தேவி! அப்போதும் நாம் வேண்டுவதையெல்லாம் நிறைவேற்றித் தந்திடுவாள்.

பஞ்சமி திதியில் வாராஹியின் மூலமந்திரம் சொல்வது, தீயசக்திகளை நம் பக்கம் நெருங்கவிடாமல் தடுக்கும். எதிரிகள் பலமிழப்பார்கள். பஞ்சமி திதியில், மூல மந்திரம் சொல்லி வாராஹியை வழிபடுங்கள்.

வாராஹிகாயத்ரி மந்திரம்:

ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தந்நோ வாராஹி ப்ரசோதயாத்

என்று காயத்ரியைச் சொல்லி வாராஹி தேவியை 11 முறை சொல்லி ஜபித்து பிரார்த்தியுங்கள். தடைகள் அகலும். வளர்பிறை பஞ்சமி விசேஷம் என்றாலும் ஒவ்வொரு பஞ்சமியிலும் வழிபடுங்கள்.

Tags:    

Similar News