தோஷ பரிகாரங்கள்

நவக்கிரக தோஷம் போக்கும் கோவில்

Published On 2022-09-01 04:50 GMT   |   Update On 2022-09-01 04:50 GMT
  • ராமரின் பிரம்மஹஸ்தி தோஷத்தை நீக்கியதாக தலபுராணம் கூறுகிறது.
  • இத்தலத்தில் உள்ள சரஸ்வதி, வீணை இல்லாமல் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்..

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பிரசித்தி பெற்ற வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு பெற்ற இந்த கோவில் சோழநாட்டு காவிரி, தென்கரை தலங்களில் 125-வது தலமாக உள்ளது.

மற்ற கோவில்களில் உள்ளது போல் இல்லாமல் இங்கு அனைத்து கோள்களும் நேர்பக்க வரிசையில் இறைவனின் திருமணக்கோலத்தை தரிசிப்பது போல் அமைந்துள்ளன. அதனால் இந்த கோவிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி வாழ்வில் வளமுடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

ராமபிரான், இலங்கையில் ராவணனை வதம் செய்த பிறகு அவருக்கு பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதனால் ராமர், வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு வந்தபோது மேற்கு முகமாக அமைந்துள்ள விநாயகரை வணங்கினார். அப்போது விநாயகர் தனது வலது காலை தூக்கி ராமருக்கு பிடித்திருந்த பிரம்மஹஸ்தி தோஷத்தை உதைத்து நீக்கியதாக தலபுராணம் கூறுகிறது. இதனால் இந்த விநாயகருக்கு ராமவீரஹத்தி விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது. வலது காலை தூக்கியபடி நர்த்தன விநாயகர் போல் இந்த விநாயகர் காட்சி அளிப்பது மிகவும் சிறப்புடையது.

சென்னையில் இருந்து வேதாரண்யத்துக்கு வர விரும்பும் பக்தர்கள் கடலூர், சிதம்பரம், வழியாக நாகப்பட்டினத்துக்கு வந்து அங்கிருந்து வேளாங்கண்ணி வழியாக வேதாரண்யத்துக்கு வந்து வேதாரண்யேஸ்வரரை தரிசிக்கலாம். மதுரை, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் பட்டுக்கோட்டைக்கு வந்து அங்கிருந்து வேதாரண்யத்தை அடையலாம். திருச்சி, தஞ்சை பகுதி பக்தர்கள் மன்னார்குடிக்கு வந்து அங்கிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரண்யத்தை அடைந்து வேதாரண்யேஸ்வரரை தரிசிக்கலாம்.

Tags:    

Similar News