தோஷ பரிகாரங்கள்

திருமண தோஷம் போக்கும் வடிவீஸ்வரம் அழகம்மன்

Published On 2022-09-06 08:06 GMT   |   Update On 2022-09-06 08:06 GMT
  • நாகர்கோவில் நகரின் மையப்பகுதியான வடிவீஸ்வரத்தில் அமைந்துள்ளது இந்த கோவில்.
  • தனித்தனி சன்னதியில் நவக்கிரங்கள் இருப்பதால் நவக்கிரக தோஷமும் நிவர்த்தியாகும்.

நாகர்கோவில் நகரின் மையப்பகுதியான வடிவீஸ்வரத்தில் அமைந்துள்ள பழமையான கோவில் அழகம்மன் கோவில். வடிவு என்றால் அழகு. அதனுடன் ஈஸ்வரன் என்ற சொற்கள் இணைந்து வடிவீஸ்வரம் ஆனது என்றும் வடிவு ஈஸ்வரிபுரம் வடிவீஸ்வரம் ஆனது என்றும் கூறுகிறார்கள். பழையாற்றின் வலது கரையில் அமைந்துள்ள இந்த கோவிலில் அழகம்மன் சுந்தரேஸ்வரர் சமேதராக காட்சி தருவது சிறப்பு.

இந்த கோவிலில் தினமும் அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 5.45 மணிக்கு பள்ளியறை பூஜை, 6.00 மணிக்கு அபிஷேகம், காலை 11 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 6.30 மணிக்கு தீபாராதனை, 7.45 மணிக்கு ஸ்ரீபலி, 8.00 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

அழகம்மன் கோவிலில் வழிபாடு செய்தால் திருமண தோஷம், தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் ஐதீகம். சுவாமி, அம்மன் தனி சன்னதியில் இங்கு காட்சியளிப்பதால் இங்கு வழிபாடு செய்யும் பெண் பக்தர்களுக்கு மாங்கல்ய தோஷம் நீங்கும். ஐப்பசி மாதம் நடைபெறும் திருக்கல்யாணத்தில் பங்கேற்றால் விரைவில் திருமணம் நடைபெறும். தனித்தனி சன்னதியில் நவக்கிரங்கள் இருப்பதால் நவக்கிரக தோஷமும் நிவர்த்தியாகும்.

Tags:    

Similar News