தோஷ பரிகாரங்கள்

அக்னீஸ்வரர், திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில் கோபுரம்.

திருமணத்தடை, வாஸ்து பரிகார தலமாக விளங்கும் திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில்

Update: 2023-03-09 04:52 GMT
  • இங்கு வழிபாடு செய்தால் வீடு கட்டும் பணி எந்தவித தடையும் இன்றி விரைவில் வீட்டை கட்டி முடிக்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
  • இந்த தலத்துக்கு வந்தாலே சனி தோஷம் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திருப்புகலூரில் பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது.

நாற்புறமும் அகழி சூழ அமைந்திருக்கும் இந்த கோவிலில் அருளும் இறைவன் அக்னீஸ்வரர், இறைவி கருந்தார்க்குழலி. சூளிகாம்பாள் என்ற பெயரும் இறைவிக்கு உண்டு.

இத்தல இறைவியின் பெயர் கருந்தாள் குழலி. இங்கு சாயரட்சை காலத்தில் அம்பாளுக்கு வெள்ளை புடவை சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது. திருமணத்தடை உள்ளவர்கள், அம்பாளுக்கு வெள்ளை புடவை சாத்தி வழிபட்டால் எளிதில் திருமண பாக்கியம் கிட்டுவதாக இங்கு வரும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இத்தலத்தில் நிகழ்கால நாதர் என்னும் வர்த்தமானீஸ்வர், கடந்தகால நாதர் பூதேஸ்வரர், எதிர்கால நாதர் பவிட்ச்சேயேஸ்வர் ஆகியோரும் உள்ளனர். இவர்களை வழிபட்டால் முற்பிறவியில் ஏற்பட்ட பாவங்கள் தோஷங்கள் நீங்கி நிகழ்காலத்தில் கிடைக்க வேண்டிய நன்மைகள், வருங்காலத்தில் கிடைக்க வேண்டிய அனைத்து செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழலாம். அப்பர் பெருமான் உழவாரப்பணி செய்து கொண்டிருந்தபோது இறைவனடி சேர்ந்த திருத்தலம் இதுவாகும்.

புதிதாக வீடு கட்டுபவர்கள் திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவிலுக்கு வந்து அக்னீஸ்வரர் சன்னிதிக்கு நேர் எதிரில் 3 செங்கற்களை வைத்து பூஜை செய்து இறைவனை வழிபட்டு எடுத்து செல்கின்றனர். இவ்வாறு பூஜை செய்த 3 செங்கற்களை வடகிழக்கு, தென்கிழக்கு பகுதிகளிலும், பூஜை அறையிலும் வைக்க வேண்டும்.

இவ்வாறு செய்தால் வீடு கட்டும் பணி எந்தவித தடையும் இன்றி நாம் விரும்பியபடி விரைவில் வீட்டை கட்டி முடிக்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த வாஸ்து பூஜை இத்தலத்தின் அனைத்து நாட்களிலும் செய்யப்படுகிறது.

இந்த தலத்துக்கு வந்தாலே சனி தோஷம் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவிலுக்கு சென்னையில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் சென்னையில் இருந்து நாகப்பட்டினம் வந்து அங்கிருந்து நாகூர், திட்டச்சோி, திருமருகல் வழியாக கோவிலை அடையலாம். நாகப்பட்டினம் பஸ் நிலையத்தில் இருந்து 24 கி.மீட்டர் தொலைவில் உள்ள கோவிலை அடையலாம். தென்மாவட்டங்களில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் வேளாங்கண்ணி செல்லும் பஸ்சில் ஏறி நாகப்பட்டினத்தில் இறங்கி கோவிலை அடையலாம்.

Tags:    

Similar News