தோஷ பரிகாரங்கள்

கல்யாண பாக்கியம், புத்திர பாக்கியம் அருளும் தாரமங்கலம் கோவில்

Published On 2022-07-01 01:39 GMT   |   Update On 2022-07-01 01:39 GMT
  • இந்த கோவில் சிற்பக்கலைக்கு புகழ் பெற்றது.
  • சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ளது கைலாசநாதர் கோவில்

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ளது. மேற்கு பார்த்து அமைந்த சிவன் கோவில் இது, இந்த பழமையான சிவன் கோவில் தமிழர்களின் சிற்பக்கலைகளுக்கு மேலும் ஒரு சான்று. இந்த கோவிலின் மூலவர் கைலாசநாதர், தாயார் கற்பகாம்பாள் அருள் பாலிக்கிறார்கள். இக்கோவிலிலுள்ள இறைவனை சந்திரனும், சூரியனும் வந்து தொழுது செல்வதாகக் கூறப்படுகிறது.

இத் தலத்திலேயே வெகு சிறப்பான சன்னதி பாதாள லிங்கம் சன்னதியாகும், மகா மண்டபத்தின் வடமேற்கு மூலையில், தலத்தின் கீழ்ப்பகுதியில் காற்று புக முடியாத ஒரு அறைக்குள் இருக்கும் இந்தப் பாதாள லிங்கத்திற்குப் பச்சைக் கற்பூரம் வைத்து செவ்வாய்க்கிழமை தோறும் அபிஷேகம் செய்தால் கல்யாண பாக்கியம், புத்திர பாக்கியம் மற்றும் தொழில் விருத்தி ஆகியவை கை கூடும் என்பது நம்பிக்கை

இத்தலத்தில் உள்ள சுரகேசுவரர் 3 தலை, 3 கால்களோடு இருப்பது சிறப்பு. இவருக்கு மிளகு ரசம் வைத்து சாதம் படைத்து, வடைமாலை சாற்றி வழிபாடு செய்தால் காய்ச்சல் மற்றும் தீராத நோய்கள் குணமடைவதாக நம்பப்படுகிறது.

தமிழகத்தின் எல்லா ஊர்களிலிருந்தும், சேலத்துக்கு பேருந்துகள் மற்றும் இரயில் போக்குவரத்து வசதி உள்ளது. சேலம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும், இரயில் நிலையத்திலிருந்தும், பத்து நிமிடங்களுக்கு ஒரு நகரப் பேருந்து வீதம் தாரமங்கலத்துக்கு இயக்கப்படுகிறது.

கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை,7.00 மணி முதல் நண்பகல் 12.30 வரையும், மாலை 04.00 மணி முதல் இரவு 8.30 மணிவரை கோயில் நடை திறந்திருக்கும். முக்கியச் சிறப்பு தினங்களில் முழு நேரமும் நடை திறந்திருக்கும்.

Tags:    

Similar News