தோஷ பரிகாரங்கள்

பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் ஓம்காரேஸ்வரர் கோவில்

Update: 2022-09-22 05:11 GMT
  • இக்கோவிலில் பக்தர்கள் வேண்டும் அனைத்து வேண்டுதல்களும் நடக்கும் என்று கூறப்படுகிறது.
  • இந்த கோவிலை 1820-ம் ஆண்டு மன்னன் லிங்க ராஜேந்திரன் கட்டியதாக கூறப்படுகிறது.

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரியில் அமைந்துள்ளது ஓம்காரேஸ்வரர் கோவில். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது இக்கோவிலுக்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது.

இக்கோவிலின் மத்தியில் வசீகரமான குவி மாடமும், அதன் நான்கு முனைகளில் ஸ்தூபிகளும் உள்ளன. அதைச்சுற்றி ரிஷபங்களும் இருக்கின்றன. குவி மாடத்திற்கு மேல் முலாம் பூசிய உருண்டையும், திசை காட்டும் கருவியும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் பக்தர்கள் வேண்டும் அனைத்து வேண்டுதல்களும் நடக்கும் என்று கூறப்படுகிறது. தங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற பக்தர்கள் இங்குள்ள இறைவனை மனதார வழிபட்டு செல்கிறார்கள். வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள இறைவனுக்கு நெய்விளக்கு ஏற்றியும், புது வஸ்திரம் சாற்றியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

இந்த கோவிலை 1820-ம் ஆண்டு மன்னன் லிங்க ராஜேந்திரன் கட்டியதாக கூறப்படுகிறது. கொடுங்கோலனான அவன் தன் அரசியல் ஆசை மற்றும் வளர்ச்சிக்காக நேர்மை மிக்க ஒரு அந்தணரை கொன்றான். அந்தணரை கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்து கொண்டது. கனவிலும், நனவிலும் வந்து மன்னனை உலுக்கி எடுத்தார் அந்தணர்.

சித்திரவதை தாங்காத அவன், ஆன்மிக பெரியவர்களின் யோசனைப்படி சிவனுக்கு கோவில் கட்டினான். அங்கு காசியில் இருந்து லிங்கத்தை கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தான். அதுவே ஓம்காரேஸ்வரர் கோவில் ஆயிற்று.

இக்கோவில் தினமும் காலை 5 மணி முதல் காலை 8 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையும் திறந்திருக்கும்.

பிரம்மஹத்தி தோஷம் உள்ளவர்கள் இக்கோவிலுக்கு வந்த சிவனை பூஜித்து வழிபட்டால் நன்மை உண்டாகும்.

Tags:    

Similar News