தோஷ பரிகாரங்கள்

ஜாதக கட்டத்தில் ஏழில் சுக்கிரன் இருந்தால் திருமணத்தில் ஏற்படும் பிரச்சனையும்.... பரிகாரமும்...

Published On 2023-01-04 06:38 GMT   |   Update On 2023-01-04 06:38 GMT
  • ஏழில் அமர்ந்த கிரகமே வாழ்க்கை துணை அமைவதை தடை செய்கிறது.
  • ஆண்கள் ஜாதகத்தில்  சுக்கிரன் மனைவியைக் குறிக்கும் கிரகமாகும்.

ஆண் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு குரு பார்வை ஆதர்சன தம்பதிகள்.பெண் ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய் சம்பந்தம் தம்பதிகளிடையே கருத்து பரிமாற்றம் அன்பு மிகுதியாகும். உரிய வயதில் திருமணம் நடைபெறும். இனிய இல்லறம் அமையும். ஆண்கள் ஜாதகத்தில்  சுக்கிரன் மனைவியைக் குறிக்கும் கிரகமாகும்.

ஆண் ஜாதகத்தில் குரு சம்மந்தம் இல்லாத சுக்கிரன் ஏழில் இருக்கும் போது காரகோ பாவகநாஸ்தி. ஆடம்பரத்திற்கும், அதிகப்படியான சந்தோஷத்திற்கும் சுக்கிரன் காரண கிரகமாக இருப்பதால் தகுதிக்கு மீறிய ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு வாழ்க்கை இழந்தவர்களும் விவாகரத்தானவர்களுமே அதிகம்.

சுக்கிரன் வக்கிரம், நீசம் அஸ்தமனமாகும் போதும் ராகு, கேதுக்களுடன் சம்பந்தம் பெரும் போதும் கணவனால் மனைவிக்கு பிரயோஜ னமற்ற நிலை அல்லது  மனைவியை பராமரிக்க முடியாத நிலை அல்லது பிரச்சினைக்கு உரிய மனைவியை அடைவார்கள்.  சென்ற பிறவியில் மனைவியை அலட்சியம் செய்தவர்களுக்கு இது போன்ற வினைப் பதிவு இருக்கும்.

பரிகாரம்

வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சுக்கிர ஓரையில் மகாலட்சுமிக்கு மல்லிகை மாலை அணிவித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

6 வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண்களுக்கு 9 வாரம் மங்கலப் பொருட்களான பூ, மஞ்சள், குங்குமம் , வளையல், வெற்றிலை, பாக்கு கொடுத்து ஆசி பெற வேண்டும்.

ஸ்ரீரங்கம் சென்று தாயாருக்கு குங்கும அர்ச்சனை  செய்ய வேண்டும்.

Tags:    

Similar News