தோஷ பரிகாரங்கள்

ஏழில் குரு இருந்தால் ஏற்படும் திருமண தடையும்.... பரிகாரமும்...

Published On 2023-01-03 05:07 GMT   |   Update On 2023-01-03 05:07 GMT
  • ஏழில் அமர்ந்த கிரகமே வாழ்க்கை துணை அமைவதை தடை செய்கிறது.
  • பலருக்கு திருமணத்திற்கு பின்பே பிரச்சினையை ஏற்படுத்துகிறது.

ஏழில் அமர்ந்த குரு லக்னத்தை பார்க்கும் என்பதால் அது பெரிய பாதிப்பைத் தராது. சிலருக்கு கால தாமதமாக திருமணம் நடக்கும். பலருக்கு திருமணத்திற்கு பின்பே பிரச்சினையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக மேஷ லக்னத்திற்கு ஏழாமிடமான  துலாத்தில் நிற்கும் குருவும், மகர லக்னத்திற்கு ஏழாமிடமான கடகத்தில் உச்சம் பெறும் குருவும்  காலதாமதம் மற்றும் பிரிவினையைத் தருகிறது. கடக லக்னத்திற்கு ஏழில் வக்ரம் பெற்ற குருவும் திருமணத்தில் தடை அல்லது திருமணத்திற்கு பின்  பிரிவினையைத் தருகிறது.

ஏழில் நின்ற குரு லக்னத்தைப் பார்ப்பதால் பிரச்சினை இருந்தாலும் கவுரவத்திற்காக பிரியாமல் விட்டுக் கொடுக்காமல் வாழ முயற்சிக்கிறார்கள்.பெண்கள் ஜாதகத்தில் குரு செவ்வாயுடன் சேருவதோ அல்லது செவ்வாயைப் பார்ப்பதோ சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் குரு சுக்கிரனை பார்ப்பதோ அல்லது சுக்கிரனுடன் சேர்வதோ சிறப்பு அல்லது தம்பதிகளின் ஜாதகத்தில் ஏழாம் அதிபதியுடன் சேர்வதோ அல்லது ஏழாம் அதிபதியை பார்ப்பதோ சிறப்பு. மேற்கண்ட எந்த நிலையும் இல்லாத போது திருமண வாழ்க்கை கடமைக்காக வாழ்வது போல் இருக்கும். 

திருமணத்திற்குப் பின் குழந்தை இல்லாத காரணத்தால் ஏற்படும் பிரிவினைகளுக்கு குரு முக்கிய காரணமாகிறது குழந்தை நல்ல நிலையில் உருவாக காரணமாக குரு இருப்பதால் குழந்தை பிறக்காமல் இருத்தல் அல்லது குழந்தையை வளர்க்க முடியாமை போன்ற காரணங்களால் பிரிவினை ஏற்படுகிறது. நம்பிக்கை, நாணயத்திற்கு காரக கிரகம் குருவாகும். ஒருவருக்கு மற்றவர் மேல் நம்பிக்கை, நாணயம் குறைவதால் ஏற்படும் பிரச்சினைகளுக்கும்  காரணமாகிறது. கருக்கலைப்பு மற்றும் குரு துரோகம் செய்தவர்களுக்கும் இது போன்ற வினைப் பதிவு இருக்கும்.

பரிகாரம்

16 வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வாசனை மலர்களால் அர்ச்சித்து 16 நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். 16 அந்தணர்களுக்கு 16 வாரம் சமைக்கத் தேவையான உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும்.

திருச்செந்தூர்சென்று முருகனை வழிபட வேண்டும். வசதியற்றவர்களின் திருமணத்திற்கு தாலிக்கு பொன் தானம் தர வேண்டும்.

Tags:    

Similar News