தோஷ பரிகாரங்கள்
மாரியம்மன்

பிரச்சனைகள் தீர மாரியம்மனை வணங்குங்கள்

Published On 2022-04-09 12:45 IST   |   Update On 2022-04-09 12:45:00 IST
‘மாரியல்லாமல் ஒரு காரியமில்லை’ என்ற வாக்குப்படி, மாரியம்மனை வழிபட்டு காரியங்களைத் தொடங்கினால் மகத்தான பலனை அடையலாம்.
பங்குனி மாதத்தில் ஊர்தோறும் அம்பிகையின் ஆலயங்களில் பூச்சொரிதல் விழா நடைபெறும். புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களுக்கு அந்த நேரத்தில் பாதயாத்திரையாகச் செல்லும் பக்தர்கள், வண்ண வண்ண பூக்களை கூடையில் ஏந்திச் சென்று, அம்பிகையின் மீது தூவி பக்தி செலுத்துவர்.

இதனால் அற்புதமான பலன்கள் கிடைக்கும். தேனை சுமக்கும் பூக்களை அம்பிகைக்கு அர்ப்பணிக்கும்பொழுது, தேனான வாழ்க்கை அமையும். அம்பிகையின் மனதைக் குளிர்வித்தால் இந்த உலகம் குளிர்ச்சி அடையும்.

மழைவளம் பெருகும். ‘மாரியல்லாமல் ஒரு காரியமில்லை’ என்ற வாக்குப்படி, மாரியம்மனை வழிபட்டு காரியங்களைத் தொடங்கினால் மகத்தான பலனை அடையலாம்.

Similar News