தோஷ பரிகாரங்கள்
பெண் சாபம் ஏற்படுவதற்கு காரணங்கள்...

பெண் சாபம் ஏற்படுவதற்கு காரணங்கள்...

Published On 2022-01-19 04:39 GMT   |   Update On 2022-01-19 09:01 GMT
ஒருவரின் ஜாதகத்தில் கோபம், சாபம் என்ற இரண்டு காரணங்களால் தான் தோஷம் உருவாகுகிறது. இந்த தோஷம் யாரால் ஏற்பட்டது என்ன குற்றத்தால் ஏற்பட்டது என்பதையும் ஒருவரின் ஜாதகம் கொண்டு அறிய முடியும்.
தோஷம் என்றால் குற்றம் அல்லது குறை என்று பொருள். ஒருவர் அறிந்தோ அரியாமலோ செய்யும்  வினையின் எதிர்விளைவு தான் தோஷம். ஒருவரின் ஜாதகத்தில் கோபம், சாபம் என்ற இரண்டு  காரணங்களால் தான் தோஷம் உருவாகுகிறது.

கோபம்: கோபம் என்பது உணர்ச்சியின் வெளிப்பாடு. இயலாமை. பலவீனத்தின் உச்சம். இதையே வேறு விதமாக கூறினால் கோபம் என்பது ஏமாந்தவர் ஏமாற்றப்பட்டவர்கள் மீது வெளிப்படுத்தும் உணர்வு.

சாபம்: சாபம் என்பது கோபத்தின் உச்சகட்டம். சாபம்  என்பது அகங்காரத்தினால் ஒருவர் செய்யும் தீமையினால் பாதிக்கப்பட்டவர்கள்  வேதனையுடன் கண்ணீருடன் சபிப்பது தான் சாபம். கடுமையான தோஷங்களாக ஜோதிட உலகம் கூறும் தோஷங்களில் ஒன்று பெண் சாபம் அல்லது ஸ்திரி தோஷம்.

கடுமையான இந்த தோஷம் தலை முறை தலைமுறையாக தொடர்ந்து சந்ததியினரை பாதிக்கிறது. இந்த தோஷம் யாரால் ஏற்பட்டது என்ன குற்றத்தால் ஏற்பட்டது என்பதையும் ஒருவரின் ஜாதகம் கொண்டு அறிய முடியும்.

பெண்கள் புகுந்த வீட்டில் சந்தோஷமாக வாழாமல் பெற்றோர், உடன் பிறந்தோர்களின் ஆதரவில்லாமல் வாழ்வது அல்லது மரணம் அடைவது, வீட்டிற்கு மருமகளாக வாழ வந்த பெண்ணை வாழ விடாமல் கொடுமைப்படுத்துவது, பிறந்த வீட்டிற்கு திருப்பி அனுப்புவது போன்றவை பெண் சாபம் ஏற்படுவதற்கு காரணங்களாக உள்ளன.

பலர் முன்னிலையில் ஒரு பெண்ணை அவமதிப்பது. அவள் நடத்தைக்கு களங்கம் ஏற்படுத்துவது.  பெண்களை ஏமாற்றுவது.  பெண்களிடம் தவறான எண்ணத்தில் பழகுவது. கட்டிய மனைவிக்கு துரோகம் இழைப்பது. காதலியை கர்ப்பமாக்கி ஏமாற்றுவது. பெண்களிடம் பணம் வாங்கி விட்டு ஏமாற்றுவது. மனம் வருந்தும் படியான கடுஞ்சொற்களை பேசி கண்ணீர் விட்டு அழ வைப்பது. உழைக்காமல்  பெண்ணின் வருமானத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு உடல் வளர்ப்பதும் காரணங்களாக உள்ளன.

பணத்திற்காக பெண்ணை கொலை செய்வது தாயை பராமரிக்காமல் விட்டு விடுவது. கருவில்  உள்ள பெண் குழந்தையை கலைப்பது. நல்ல மாமியாரை பராமரிக்காமல் விடுவது போன்ற பல காரணங்களால் பெண் சாபம் ஏற்படுகிறது.

‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
Tags:    

Similar News