தோஷ பரிகாரங்கள்
திருமணத் தடை பரிகாரம்

திருமணத் தடையா?... 7-ம் வீட்டில் நிற்கும் பாவ கிரகங்களுக்கு பரிகாரம்

Published On 2021-12-23 10:48 IST   |   Update On 2021-12-23 13:34:00 IST
ஏழாம் வீட்டில் நிற்கும் பாவ கிரகங்களுக்கு ஏற்ப பரிகாரங்கள் செய்தால் திருமண தடை அகலும். 7-ம் வீட்டில் எந்த கிரகம் இருந்தால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
ஏழாம் வீட்டில் நிற்கும் பாவ கிரகங்களுக்கு பரிகாரம்.

7ல் சூரியன் திருவண்ணாமலையில் பாதாளலிங்க தரிசனம் செய்ய வேண்டும்.

7ல் செவ்வாய் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பஞ்சலிங்க தரிசனம் செய்ய வேண்டும்.

7ல் சனி கும்பகோணம் அருகே உள்ள குத்தாலத்தில் பாதாள சனிபகவானை வழிபட வேண்டும். 7ல் ராகு ராமேஸ்வரத்தில் உள்ள பாதாள பைரவரை வழிபட வேண்டும்.

7ல் கேது காளஹஸ்தியில் உள்ள பாதாள விநாயகரை வழிபட வேண்டும்.

பணப் புழக்கம் அதிகரிக்க:

வீட்டில், தொழில் செய்யும் இடத்தில் பணப்புழக்கம் அதிகரிக்க சிகப்பு காட்டன் துணியில் சிறிது குங்குமப்பூ மற்றும் புதிதாக காலை வேளையில் பறித்த துளசி இலையை முடிந்து வைக்க, பணப்புழக்கம் அதிகரிக்கும். வார வாரம் இலைகள் மற்றும் குங்குமப்பூவை மாற்ற வேண்டும்.

சனியின் தாக்கம் குறைய:

வாரந்தோறும் சனிக்கிழமை அன்று ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து ஸ்ரீ ராம ஜெயம் எழுதி வர சனியினால் ஏற்படும் இன்னல்கள் குறையும். சனிதிசை, சனிபுத்தி, ஏழரைச்சனி மற்றும் அஷ்டமச்சனி நடப்பவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

குழந்தை பாக்கியம்:

குழந்தை பாக்கியம் பெற விரும்புபவர்கள் வியாழக்கிழமை இரவு 8-9 மணிக்குள் 21 மஞ்சள் நிற லட்டு தானம் தர குழந்தை பாக்கியம் உண்டாகும்.

Similar News