ஆன்மிகம்
புனித ஜெர்மேனம்மாள் ஆலய திருவிழாவில் தேர் பவனி

புனித ஜெர்மேனம்மாள் ஆலய திருவிழாவில் தேர் பவனி

Published On 2021-04-19 03:55 GMT   |   Update On 2021-04-19 03:55 GMT
சோழவந்தான் அருகே உள்ள ராயபுரம் புனித ஜெர்மேனம்மாள் ஆலயம் திருவிழாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு விதித்த கட்டுப்பாடுடன் திருவிழா நடைபெற்று வருகிறது.
சோழவந்தான் அருகே உள்ள ராயபுரம் புனித ஜெர்மேனம்மாள் ஆலயம் உள்ளது. இங்கு வருடந்தோறும் திருவிழா நடைபெறும். இதில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வர்கள். இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு விதித்த கட்டுப்பாடுடன் திருவிழா நடைபெற்று வருகிறது.

நேற்று பங்குத்தந்தை பிரான்சிஸ் சேவியர், ஊராட்சி மன்ற தலைவர் சிறுமணி என்ற மணி, கிராம கமிட்டி தலைவர் வின்சென்ட் ஆகியோர் முன்னிலையில் தேர்பவனி நடந்தது. இதுகுறித்து அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர் கூறும்போது. புனித ஜெர்மேனம்மாள் தேவாலயம் சிறப்பு பெற்றதாகும். இந்த ஆண்டு கொரோனா நோய் காரணமாக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

அரசு விதித்த கட்டுப்பாடுடன் வெளிமாவட்ட, வெளியூரிலிருந்து பக்தர்கள் வராமல் உள்ளூர் பக்தர்களை வைத்து எளிய முறையில் திருவிழா நடக்கிறது. அடுத்த ஆண்டு கொரோனா நோய் இல்லாமல் திருவிழா நடைபெறும் என்று கூறினார். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News