ஆன்மிகம்
சென்னை மறை மாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா கொடி ஏற்றியபோது எடுத்த படம்.

வில்லியனூர் லூர்து மாதா திருத்தல ஆண்டுவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2021-04-12 03:20 GMT   |   Update On 2021-04-12 03:20 GMT
வில்லியனூர் லூர்து மாதா ஆலய ஆண்டுவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நவநாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலிகள், தேர் பவனி நடக்கிறது.
வில்லியனூரில் பிரசித்திபெற்ற லூர்து அன்னை திருத்தலம் உள்ளது. இங்கு ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிந்து 6-வது நாளில் கொடியேற்றத்துடன் தொடங்கும்.

அதன்படி 144-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கூட்டு திருப்பலி நடைபெற்றது. பின்னர் ஆலயத்தின் முகப்பில் உள்ள கொடி மரத்தில் சென்னை மறை மாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா கொடியேற்றினார்.

இதில் ஆலய பங்குத்தந்தை பிச்சைமுத்து மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து காலை 7 மணிக்கும், பகல் 11.30 மணிக்கும் திருப்பலிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளில் கொரோனா நடவடிக்கையாக முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் நவநாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலிகள், தேர் பவனி நடக்கிறது. வருகிற 17-ந்தேதி மாலை 6 மணிக்கு சேலம் முன்னாள் ஆயர் சிங்கராயர் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது.

18-ந்தேதி காலை 7.30 மணிக்கு புதுவை- கடலூர் மறை மாவட்ட முன்னாள் பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது. அதன்பின் மாலை 6 மணிக்கு புதுவை- கடலூர் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் பீட்டர் அபீர் தலைமையில் திருப்பலியும், அதனை தொடர்ந்து பெருவிழா ஆடம்பர தேர் பவனியும் நடக்கிறது.
Tags:    

Similar News