ஆன்மிகம்
புதூர் லூர்து அன்னை ஆலய திருவிழாவில் தேர் பவனி
மதுரை புதூர் லூர்து அன்னை ஆலய திருவிழாவில் தேர் பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மதுரை புதூர் தூய லூர்து அன்னை ஆலய திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி கொடியேற்றி வைத்து விழாவினை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து தினமும் காலையிலும், மாலையிலும் நவநாள் சிறப்பு திருப்பலி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நற்கருணை பவனி நடந்தது.
இந்தநிலையில், நேற்று தக்கலை மறை மாவட்ட ஆயர் ராஜேந்திரன் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. திருச்சி சலேசிய மாநில தலைவர் அந்தோணி ஜோசப் முன்னிலை வகித்தார்.
இதனை தொடர்ந்து அன்னையின் தேரானது பூக்களால், அலங்கரிக்கப்பட்டு தேர் பவனி நடந்தது. சந்தன மாதா கோவில் தெரு, சிங்காரவேல தெரு, மாரியம்மன் கோவில் தெரு, பாரதியார் மெயின்ரோடு, அழகர்கோவில் ரோடு வழியாக ஆலயத்தை வந்தடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாதாவிற்கு பொங்கல் வைத்து நன்றி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை தாஸ்கென்னடி, உதவி பங்கு தந்தையர் மார்சல் லிங்கன், பிரவின், சூசைஅடிமை, அஸ்வின் மற்றும் பலர் செய்துள்ளனர்.