ஆன்மிக களஞ்சியம்

வாராகி மாலை-அருள்காட்சி வடிவம்

Published On 2024-10-25 16:45 IST   |   Update On 2024-10-25 16:45:00 IST
ஒரு குறிப்பிட்ட வழிபாட்டிற்காக அன்னையை நம் முன் அமரவைக்க இப்பாடலை பாட வேண்டும்.

தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்குவட்டது

ஈராறிதழ் இட்டு, ரீங்காரம் உள்ளிட்டது நடுவே

ஆராதனை செய்து அர்ச்சி பூஜித்து அடிபணிந்தால்

வாராது இராள் அல்லவே வாலை ஞான வாராகியுமே

பொருள்: வாராகி யந்திர வடிவம் இது. முக்கோணம், அறுகோணம், வட்டம், சுற்றிலும் தாமரைத்தளம், மத்தியில் பீஜம், இதை முறையாக எழுதி வாராகியை வழிபட வாராகி 'வாலை' திரிபுர சுந்தரியாக எழுந்து நமக்கு 'அட்டமா சித்திகளை' வழங்குவாள் என்று பொருள்.

பயன்பாடு : ஒரு குறிப்பிட்ட வழிபாட்டிற்காக அன்னையை நம் முன் அமரவைக்க இப்பாடலை பாட வேண்டும்.

Similar News