ஆன்மிக களஞ்சியம்

தேரைய சித்தரை வணங்கும் முறை

Published On 2024-12-03 16:57 IST   |   Update On 2024-12-03 16:57:00 IST
  • அர்ச்சனை செய்தபின் மூலமந்திரமாக “ஓம் லபம் ருணம் நஸீம் ஸ்ரீ தேரைய சித்தரே போற்றி! போற்றி!” என்று 108 முறை கூறி வழிபட வேண்டும்.
  • நிவேதனமாக மிளகு பொங்கல், பால் பாயாசம், தேங்காய் சாதம் போன்றவற்றை படைக்க வேண்டும்.

அகத்தியரிடம் பேரன்பு கொண்ட சீடரான தேரைய சித்தரை வணங்க அகப் புறத்தூய்மையுடன் அழகிய சிறு பலகையை செம்மண்ணினால் மெழுகிக் கோலமிட்டு மஞ்சள் குங்குமம் இடவேண்டும்.

அவ்வாசனத்தின் மேல் தேரையரின் படம் வைத்து வெள்ளை அல்லது ரோஜா வண்ண வஸ்திரம் அணிவித்து அல்லது படைத்து அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கினை நான்கு அல்லது ஐந்து முக தீபமேற்றி வழிபட வேண்டும்.

முதலில் தியான செய்யுளை கூறி மூலிகை இலைகளினால் அர்ச்சனை செய்து பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூற வேண்டும்.

1. குரு மெச்சிய சீடரே போற்றி!

2. தேரையை அகற்றிய தேரையரே போற்றி!

3. சிவனை பூசிப்பவரே போற்றி!

4. சங்கடங்களை போக்குபவரே போற்றி!

5. சஞ்சலங்களை தீர்ப்பவரே போற்றி!

6. சாந்த சொரூபரே போற்றி!

7. நோய்தீர்க்கும் மருந்தே போற்றி!

8. ஞானம் அளிக்கும் ஞானியே போற்றி!

9. சித்த சுத்தியுடையவரே போற்றி!

10. சகல பாபங்களையும் போக்குபவரே போற்றி!

11. குறிப்பறிந்து செய்யும் குணசீலரே போற்றி!

12. வெள்ளை வஸ்திரம் தரிப்பவரே போற்றி!

13. துக்கத்தை போக்குபவரே போற்றி!

14. கண் ஒளி தந்த கருணையே போற்றி!

15. குறை தீர்க்கும் நிறையே போற்றி!

16. பாண்டியன் கூன் நிமிர்த்திய தேரையரே போற்றி! போற்றி!

அர்ச்சனை செய்தபின் மூலமந்திரமாக "ஓம் லபம் ருணம் நஸீம் ஸ்ரீ தேரைய சித்தரே போற்றி! போற்றி!" என்று 108 முறை கூறி வழிபட வேண்டும்.

நிவேதனமாக மிளகு பொங்கல், பால் பாயாசம், தேங்காய் சாதம் போன்றவற்றை படைக்க வேண்டும்.

இவரை பூசிக்க ஞாயிற்றுக் கிழமை சிறந்தது.

Similar News