ஆன்மிக களஞ்சியம்

ஸ்ரீகருடாழ்வார்

Published On 2024-10-28 17:30 IST   |   Update On 2024-10-28 17:31:00 IST
  • வேதாந்த தேசிகர் ‘கருட பஞ்சாசத்’ என்ற நூலை திருவகிந்திரபுரத்தில் இயற்றினார்.
  • இதற்குச் சான்றாக அங்கு கருட பகவானால் நிர்மானிக்கப்பட்ட ‘கருட நதி’ ஓடுகிறது.

வேதாந்த தேசிகர் 'கருட பஞ்சாசத்' என்ற நூலை திருவகிந்திரபுரத்தில் இயற்றினார்.

இதற்குச் சான்றாக அங்கு கருட பகவானால் நிர்மானிக்கப்பட்ட 'கருட நதி' ஓடுகிறது.

ஆதிசங்கரர் இயற்றிய நூல்களில் சவுந்தர்ய லஹரி' என்பது ஒன்று.

மந்திர சாஸ்திரமாகக் கருதப்படும் இந்த நூலின் 20 வது பாடலில் கருடனைப் பற்றிய செய்தி வருகிறது.

அது வருமாறு:

"தேவியை எவன் உள்ளத்தில் நிலைநிறுத்தி தியானம் செய்கிறானோ, அவன் பட்சி ராஜனாகிய கருடனைப் போல் பாம்புகளின் விஷத்தை அடக்குகிறான். ஜூரத்தால் பீடிக்கப்பட்டவர்களைப் பீடை நீங்கிச் சுகமடையச் செய்கிறான்".

தொண்டரடிப் பொடியாழ்வார் தமது 'திருமாலை' என்ற பாசுரங்களில் 10வது பாடலில் கருடனைப் பற்றி பின் வருமாறு கூறுகிறார்.

"கேட்டிரே நம்மீர்காள்!

கருட வாகனனும் நிற்க!

சேட்டை தன் மடிய கத்துச்

செல்வம் பார்த்திருக்கின்றீரே!"

பொருள்: கருடனை வாகனடாகக் கொண்டுள்ள மலர் மகள் மணவாளன் இருக்கும் போது, பிற தேவதைகளைப் பற்றுவது மூதேவியிடம் செல்வத்தை வேண்டுவது போலாகும்.

Similar News