- உலக நாடுகளின் வரலாறை படித்துப் பார்த்தால் பொதுவான உண்மை ஒன்று நமக்குத் தெரியவரும்.
- அதாவது, எங்கெல்லாம் வற்றாத ஜீவ நதிகள் செழிப்பாகப் பாய்கின்றதோ, அந்தப் பகுதிகளில்தான் மனித நாகரீகம் வளர்ச்சியடைய ஆரம்பித்தது.
உலக நாடுகளின் வரலாறை படித்துப் பார்த்தால் பொதுவான உண்மை ஒன்று நமக்குத் தெரியவரும்.
அதாவது, எங்கெல்லாம் வற்றாத ஜீவ நதிகள் செழிப்பாகப் பாய்கின்றதோ, அந்தப் பகுதிகளில்தான் மனித நாகரீகம் வளர்ச்சியடைய ஆரம்பித்தது.
இந்த யதார்த்த நிலை நமது புண்ணிய பூமிக்கும் பொருந்தும் என்பதை நாம் பல நூல்கள் வாயிலாக படித்துத் தெளிந்திருக்கிறோம்.
நமது பெருமைமிகு புண்ணிய நாட்டில் பிரம்ம புத்திரா, துங்கபத்திரா, சிந்து, கங்கை, கோதாவரி, நர்மதை, கிருஷ்ணா, சரசுவதி, காவேரி, யமுனை, பரணிதா, தாமிரபரணி என்கிற பன்னிரெண்டு ஜீவ நதிகளும் பல நூற்றாண்டுகளாக ஆன்றோர்களால் புண்ணிய நதிகளாக போற்றப்பட்டும், வணங்கப்பட்டும் வருகிறது.
இந்த நதிகள் ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட ராசி உண்டு.
அந்த வகையில் தாமிரபரணி (விருச்சிகம்), பிரம்மபுத்திரா (கும்பம்), துங்கபத்ரா (மகரம்), சிந்து (தனுசு), கங்கை (மேஷம்), கோதாவரி (சிம்மம்), நர்மதை (ரிஷபம்), கிருஷ்ணா (கன்னி), சரசுவதி (மிதுனம்), காவேரி (துலாம்), யமுனை (கடகம்), பரணிதா (மீனம்) என சான்றோர்களால் வகுக்கப்பட்டுள்ளது.
வான சாஸ்திர கணிப்பின்படி குருபகவான் ஒவ்வொரு ராசியிலும் பன்னிரெண்டு ஆண்டுகள் சஞ்சாரம் செய்வதாக ஐதீகம்.
அந்த வகையில், நமது புண்ணிய நதிகள் ஒவ்வொன்றும் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு பகவான் பிரவேசிக்கையில் அதனை மகா புஷ்கர விழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
அந்த வேளையில் அதாவது மகா புஷ்கரம் கொண்டாட்டத்தில் ஆன்றோர்களும், சான்றோர்களும், பக்தர்களும், பொதுமக்களும் நாடு முழுவதிலும் இருந்து கிளம்பி வந்து முக்கியமான தீர்த்த கட்டங்களில் புனித நீராடி இறையருள் பெற்று பேரின்பம் அடைகின்றனர்.
பாவம் தொலைத்து புண்ணியம் சேர்க்கின்றனர்.