ஆன்மிக களஞ்சியம்

முன்னோர்கள் வகுத்த புண்ணிய தலங்கள் மூன்று

Published On 2024-12-10 18:00 IST   |   Update On 2024-12-10 18:00:00 IST
  • மருத மரத்தை வடமொழியில் அர்ச்சுன விருட்சம் என அழைப்பதுண்டு.
  • மருத மரத்தை தல விருட்சமாகக் கொண்டு விளங்கும் திருத்தலங்கள் நமது மண்ணில் அநேகம்.

மருத மரத்தை வடமொழியில் அர்ச்சுன விருட்சம் என அழைப்பதுண்டு.

மருத மரத்தை தல விருட்சமாகக் கொண்டு விளங்கும் திருத்தலங்கள் நமது மண்ணில் அநேகம்.

ஆயிரத்தி இருநூறு ஆண்டுகளுக்கும் மேலான புராதனப் பெருமையும், இறைவன் சுயம்பு மூர்த்தியாக வெளிப்பட்ட தன்மையும், பாரத நாட்டின் பழம் பெரும் புண்ய நதிக்கரையில் அமைந்த திருக்கோவில் எனவும் பல அம்சங்கள் ஒன்றாகப் பொருந்தி நிற்கும் திருத்தலங்கள் மூன்று ஆகும்.

நமது சான்றோர்கள் காலம் காலமாக இந்த தலங்களை புண்ணிய இடங்களாக மதித்து பேணியும், போற்றியும், வணங்கியும் வருகின்றனர்.

அவை மல்லிகார்ச்சுனம் (ஸ்ரீசைலம்), மத்தியார்ச்சுனம் (திருவிடை மருதூர்), புடார்ச்சுனம் (திருப்புடை மருதூர்) எனப்படும் மூன்று தலங்களாகும்.

இவை ஒன்றுக்கொன்று சமமான அம்சங்களைக் கொண்டு விளங்கும் காரணத்தால் முதல் தலம், இடைத்தலம், கடைத்தலம் என்றும் பகுக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இனி அவைகள் ஒவ்வொன்றின் மகத்துவத்தை வரிசையாகக் காணலாம்.

Similar News