ஆன்மிக களஞ்சியம்

மருத்துவபாடசாலையாக விளங்கிய தோரணமலை

Published On 2024-12-03 17:23 IST   |   Update On 2024-12-03 17:23:00 IST
  • அக்காலக் கட்டங்களில் அதாவது ஆதியில் மலையும் மலைசார்ந்த இடங்களும்தான் பாட சாலைகளின் அமைவிடமாக விளங்கின.
  • அந்த வகையில் உலகிலேயே முதல் மருத்துவ பாடசாலை தொடங்கப்பட்ட இடமே தோரணமலை என்று தோரணகிரியாகும்.

நாம் பாடம் படிக்க பள்ளிகளையும், கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் நாடுவது இன்றைய காலமுறையாக உள்ளது.

இதற்கு முந்தைய காலத்தில் திண்ணையிலும் மர நிழல்களிலும் மண்ணிலும் அமர்ந்து பாடம் கற்றார்கள்.

அதற்கும் முற்பட்ட காலங்களில் குருகுலம்தான் பள்ளிக்கூடங்களாகவும் கல்விச்சாலைகளாகவும் திகழ்ந்தன.

அக்காலக் கட்டங்களில் அதாவது ஆதியில் மலையும் மலைசார்ந்த இடங்களும்தான் பாட சாலைகளின் அமைவிடமாக விளங்கின.

அந்த வகையில் உலகிலேயே முதல் மருத்துவ பாடசாலை தொடங்கப்பட்ட இடமே தோரணமலை என்று தோரணகிரியாகும்.

இதைக் கேள்விப்படும்போதே நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?

உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகேதான் இந்த தோரணமலை என்ற தோரணகிரி உள்ளது.

இந்த மலையின் உச்சியில் இருக்கும் குகைக்கோவிலில் முருகப் பெருமான் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார்.

இறையருளும் மூலிகை வாசமும் வீசும் இந்த மலைப்பகுதி ஒரு காலக் கட்டத்தில் பல பட்டங்கள் வழங்கும் மருத்துவ பாடசாலையாகவும் ஆராய்ச்சி மையமாகவும் விளங்கியது என்கிறார் சித்தர்கள் மற்றும் சித்தமருத்துவ ஆராய்ச்சியாளர் எஸ்.கே.டி.பி.காமராஜ் அவர்கள்.

Similar News