ஆன்மிக களஞ்சியம்

கடன் பட்ட கங்கை நதி கடனா நதி

Published On 2024-12-11 17:46 IST   |   Update On 2024-12-11 17:46:00 IST
  • இதனால் கங்கை மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தாமிரபரணி நோக்கி பாய்ந்தது. பின் பார்வதி தேவியை வட்டமிட்டு நின்றது.
  • ஆனாலும் பார்வதியின் கோபம் தணியவில்லை. இதனால் கங்கையின் கடமையும் முடியவில்லை.

ஒரு சமயம் அத்திரி மகரிஷியின் சீடர் பிருங்கி முனிவர் மேற்கு தொடர்ச்சி மலைக்கு வந்தார். அங்குள்ள ஆசிரமத்தில் அவர் தவம் இருக்க துவங்கினார்.

இவரின் தவத்தினை மெச்சிய பார்வதி தேவி சிவபெருமானிடம், ''உங்களை நோக்கி ஒரு பக்தர் தவம் இருக்கிறார்.

அவருக்கு அருளாசி வழங்கலாம் வாருங்கள்'' என்றழைத்தார். சிவபெருமானும் அந்த ஆசிரமத்துக்கு வந்து தாயாருடன் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார்.

ஆனால் சிவபெருமான் மீது அதிக பற்று கொண்ட பிருங்கி முனிவர் சிவபெருமானை கண்டவுடன் ஆனந்தம் அடைந்து பார்வதிதேவியை தள்ளிவிட்டுவிட்டு சிவனை மட்டும் சுற்றி வணங்கினார்.

இதனால் ஆத்திரமடைந்த பார்வதி தேவி கோபமாகி திருப்புடைமருதூர் தாமிரபரணி கரையில் வடபுறம் வந்து நின்றார்.

உடனே சிவபெருமான் தன் தலையில் உள்ள கங்கையை அவிழ்த்து விட்டு, ''பார்வதி தேவியின் கோபத்தினை தாழ்த்தி அழைத்து வா... அது உடன் கடன்'' என்று அனுப்பிவைத்தார்.

இதனால் கங்கை மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தாமிரபரணி நோக்கி பாய்ந்தது. பின் பார்வதி தேவியை வட்டமிட்டு நின்றது.

ஆனாலும் பார்வதியின் கோபம் தணியவில்லை. இதனால் கங்கையின் கடமையும் முடியவில்லை.

ஆகவே ''கடன்பட்ட கங்கை நதி கடனா நதி''யாக இங்கே ஓடி கொண்டிருக்கிறது.

Similar News