ஆன்மிக களஞ்சியம்

காசியில் ஏன் கருடன் பறப்பதில்லை?

Published On 2024-10-28 11:27 IST   |   Update On 2024-10-28 11:27:00 IST
  • அப்போது, கருடன் வட்டமிட்டு சுயம்புலிங்கம் ஒன்றை குறிப்பிட்டுக் காட்டினார்.
  • அதே சமயம் பல்லி சப்தம் செய்தது. இதனைக் கண்ட அனுமன் சுயம்புலிங்கம் இருக்கும் இடத்தை கண்டுக் கொண்டார்.

ராமபிரான் ஆணையால் அனுமான் சுயம்புலிங்கம் ஒன்றைக் எடுத்துவர ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு சென்றார்.

காசியில் எங்கு பார்த்தாலும் லிங்கங்களே இருந்தன.

இதில் எது சுயம்புலிங்கம் என்று கண்டுபிடிக்க முடியாமல் அனுமான் சிந்தனையில் ஆழ்ந்தார்.

அப்போது, கருடன் வட்டமிட்டு சுயம்புலிங்கம் ஒன்றை குறிப்பிட்டுக் காட்டினார்.

அதே சமயம் பல்லி சப்தம் செய்தது. இதனைக் கண்ட அனுமன் சுயம்புலிங்கம் இருக்கும் இடத்தை கண்டுக் கொண்டார்.

இதனால்தான் காசியில் எல்லைக் காவல் தெய்வமான ஸ்ரீ பைரவர் கருடனையும், பல்லியையும் சபித்து விட்டார்.

இதிலிருந்து காசியில்கருடன் பறப்பதில்லை, பல்லி ஒலிப்பதில்லை.

Similar News