ஆன்மிக களஞ்சியம்

கருடா சவுக்கியமா?

Published On 2024-10-28 17:12 IST   |   Update On 2024-10-28 17:12:00 IST
  • இது மாயவரம் அருகில் உள்ள கொல்லுமாங்குடி என்ற ஊரின் அருகாமையில் உள்ளது.
  • இங்கு பூமிக்குக் கீழ் கருடன் சன்னதியும், பூமிக்கு மிக உயர்ந்த இடத்தில் ஆதிசேஷன் சந்நதியும் இருக்கிறது.

பெருமாள் கருடனுக்கு அபயம் அளித்த தலம் "திருச்சிறு புலியூர்" என்ற தலமாகும்.

இது மாயவரம் அருகில் உள்ள கொல்லுமாங்குடி என்ற ஊரின் அருகாமையில் உள்ளது.

இங்கு பூமிக்குக் கீழ் கருடன் சன்னதியும், பூமிக்கு மிக உயர்ந்த இடத்தில் ஆதிசேஷன் சந்நதியும் இருக்கிறது.

"கருடா சவுக்கியமா" என்று பாம்பு கேட்டதற்கு "அவரவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் எல்லாம் சவுக்கியமே" என்று கருடன் சொன்னதாக புராணங்களில் உள்ளது.

இந்த நிகழ்வு நடந்தது இந்த தலத்தில்தான்.

கருடாழ்வாரை வணங்கும் துதி

பெருமாள் கோவிலில் வீற்றிருக்கும் கருட பகவானை வணங்கும் போது பின்வரும் கருட துதியைக் கூறி வணங்கினால் கருட பகவான் அருள்கிட்டும்.

கருடாய நமஸ்துப்யம் ஸர்வ

சர்பேந்நர சத்ரவே

வாஹனாய மஹாவிஷ்ணோ

தார்ஷ்யாய அமித தேஜயே

Similar News