ஆன்மிக களஞ்சியம்

அன்னைக்கு கொலுசு அணிவிக்க மறுத்த அர்ச்சகர்கள்

Published On 2024-12-19 18:04 IST   |   Update On 2024-12-19 18:04:00 IST
  • ஆனால் ஆலய அர்ச்சகர்களோ, நாங்கள் பரம்பரை பரம்பரையாக இந்த அம்பிகையைத் தொட்டு அபிஷேகம் செய்து பூஜை நடத்துகிறவர்கள்.
  • கொலுசு அணிவிக்கும் வசதி அம்பிகையின் கால்களில் இல்லை என மறுத்துவிட்டனர்.

திரு மீயச்சூருக்கு வந்து லலிதாம்பிகைக்கு கொலுசு அணிவிக்க விரும்பிய அப்பெண்மணி உடனடியாக அக்கோவிலின் அர்ச்சகர்களைத் தொடர்பு கொண்டார்.

தனது கனவில் அம்பாள் வந்து கொலுசு கேட்ட விவரத்தையும் அதை அணிவிக்க தான் திருமீயச்சூருக்கு வருவதாகவும் கடிதம் எழுதினார்.

ஆனால் ஆலய அர்ச்சகர்களோ, நாங்கள் பரம்பரை பரம்பரையாக இந்த அம்பிகையைத் தொட்டு அபிஷேகம் செய்து பூஜை நடத்துகிறவர்கள்.

கொலுசு அணிவிக்கும் வசதி அம்பிகையின் கால்களில் இல்லை என மறுத்துவிட்டனர்.

ஆனால் அந்தப் பெண்ணோ கொலுசு, அணிவிக்கும் வசதி இல்லையென்றால் எனது கனவில் வந்து கொலுசு அணிவிக்கச் சொல்லி ஆணையிட வேண்டிய அவசியம் என்ன? என்று தனது முடிவில் உறுதியுடன் மீண்டும் அர்ச்சகர்களை வற்புறுத்தினார்.

Similar News