அகத்தியருக்கு ஈசன் காட்சி கொடுத்த திருத்தலம்
- தேவேந்திரன் இந்திராணியுடன் பிரம்மஹத்தியை விட்டு இவ்விடத்தில் நீங்கியபடியால், இது சுரேந்திர மோட்சம் என்று மூவுலகத்திலும் கூறப்படும்.
- பிரம்மனின் தண்டம் புடார்ஜினமாகிய இங்கு, தண்டாதரனாக இருப்பதால் இந்த தலம் தண்டாசி என்றும் கூறப்படுகிறது.
அகத்திய மாமுனி இந்த முக்கிய தீர்த்தங்களில் எல்லாம் சாஸ்திர முறைப்படி நீராடி வழிபட்டு தட்சிணை அளித்து புடார்சுனே சனையும், கோமதி அம்பாளையும் வலம் வந்து வணங்கி, மந்திரங்களையும், தந்திரங்களையும் கொண்டு தூபம், தீபம், சந்தம், புஷ்பம், அட்சதை, நைவேத்யம் முதலானவைகளால் சிவனை பூஜித்து, பூஜை முடிவுபெற பின் வருமாறு தோத்திரம் செய்தார்.
'ஓம் சகல பிராணிகளையும் சிருஷ்டித்து பாலனம் செய்து, சம்ஹாரம் செய்கின்ற திருமூர்த்தியும், சகல பதார்த்தங்களுக்கும் காரணரூபியும், விருட்சத்தின் பொந்தில் வாசம் செய்பவனுமாக இருக்கும் உனக்கு வணக்கம்.
ஸ்ரீஹரியின் கண்களால் அர்ச்சனை செய்யப் பெற்றவனும், காளகூட விஷத்தை பானம் செய்தவனும், பக்தர்களின் மேன்மைக்காக ஆசை கொண்டவனுமாக இருக்கின்ற புடார்சுனனை அடியேன் உபாசனை செய்கிறேன்.
பரிமளம் பூசியவனும், அழகு பொருந்தியவனும், சந்திர பிரபை சூடியவனும், வீரானந்தரசம் என்று பெயர் பெற்றவனுமாகிய புடார்சுனனை உபாசனை செய்கிறேன்.
கங்கையைத் தரித்தவனும், பிறை சூடியவனும், அர்த்த நாரீச ரூபம் கொண்டவனும், வாசுதேவனுக்கு நேசனும், சாந்தனுமாக விளங்கும் புடார்சுனரை வணங்குகிறேன்.
யமனுக்கு யமனாகவும், கலைகளுக்கு ஆதாரமாகவம், பக்தர்களுக்கு பீதியை போக்குபவனும், பார்வதியுடன் மங்கள ரூபியாக இருக்கும் புடார்சுனரை உபாசனை செய்கிறேன்.
சூரியன், சந்திரனை கண்களாகப் பெற்றவனும், விஷ்ணு ரூபியும், கோடி சூரியனின் ஒளியைத் தாங்கியவனுமான புடார்சுனரை உபாசிக்கிறேன்.
சங்கு, குருக்கு முல்லை, சந்திரன் இவை போல் வெளுத்தவனும், கற்பூரம் போல் பரிசுத்த சரீரம் கொண்டவனும், கருணா ரூபிணியுமான புடார்சுன தேவனை உபாசிக்கிறேன்." என்று துதித்து பக்தி ததும்பிய மனதுடன் அகத்திய மாமுனி தண்டம் போல சன்னிதானத்தில் விழுந்து வணங்கினார்.
அப்போது அர்த்த நாரீசராக பரமசிவன் லிங்கத்தில் இருந்து தோன்றி, திருக்கைகளால் வெகுமானித்து பின்வருமாறு திருவாய் மலர்ந்தருளினார்.
"ஓ... முனியே, கவுதம முனியையும், ஏகத முனியையும் சமாதானம் செய்து நாம் உத்திரவு கொடுத்தபடி, மலைய பர்வதத்தில் குப்தி சிருங்கம் செல்ல வேண்டும்."
என்று கூறி அந்த லிங்கத்தில் மறைந்த உடன் கும்பமாமுனி ஆச்சரியம் கொண்டு ஹயக்ரீவன் மற்ற முனிவர்களுடன் பிரம்மானந்தத்தை உணர்ந்தார்.
தேவேந்திரன் இந்திராணியுடன் பிரம்மஹத்தியை விட்டு இவ்விடத்தில் நீங்கியபடியால், இது சுரேந்திர மோட்சம் என்று மூவுலகத்திலும் கூறப்படும்.
பிரம்மனின் தண்டம் புடார்ஜினமாகிய இங்கு, தண்டாதரனாக இருப்பதால் இந்த தலம் தண்டாசி என்றும் கூறப்படுகிறது.