அகத்தியர் நீராடி வழிபட்ட 10 புண்ணிய தீர்த்தங்கள்
- அதற்கு தென்பக்கத்தில் பரஞ்ஜோதியாக மகாபாவங்களைத் தொலைக்கும் தண்டபாவம் என்று பெயர் பெற்ற புண்ணிய தீர்த்தம் ஒன்று உள்ளது.
- அதில் நீராடி வழிபடுவோர் சகல விருப்பங்களையும் இவ்வுலகில் அனுபவித்து முடிவில் முக்தியைப் பெறுகின்றனர்.
சிறப்பு மிக்க இந்த தலத்தின் அருகே மிக அதிகமான தீர்த்தக்கட்டங்கள் உள்ளன.
அதாவது அருகில் உள்ள ஊர்க்காட்டில் இருந்து திருப்புடைமருதூர் வரை 10 முக்கிய தீர்த்தக்கட்டங்கள் உள்ளன.
அனைத்துமே சிறப்பு மிக்கவை ஊர்க்காட்டில் உள்ள சக்கர தீர்த்தம், அத்தாளநல்லூரில் உள்ள கஜேந்திர வரதர் படித்துறைக்கு தென்புறம் உள்ள விஷ்ணு தீர்த்தம், அதன் வடபகுதியில் உள்ள அகத்தியர் தீர்த்தம், மற்றும் அதனருகே உள்ள சிங்கதீர்த்தம், திருப்புடைமருதூர் அருகே கடனா நதி சேரும் இடத்தில் கடனா சங்கம தீர்த்தம், கோவில் பின்புறம் படித்துறையில் தெற்கு ஓரமுள்ள பைசாச மோனசோ தீர்த்தம், சுரேந்திர மோட்ச தீர்த்தம், படித்துறையின் வடக்கு பகுதியில் கருமதீர்த்தம், அதற்கு எதிர்புறம் தண்ட பிரம்மச்சாரி தீர்த்தம், நதி கிழக்காக திரும்பும் இடத்தில் மனசா தீர்த்தம் ஆகியவை இன்மைக்கும் மறுமைக்கும் நன்மை பயக்கும் தீர்த்தங்களாக இங்கு விளங்குகிறது.
திருப்புடைமருதூரில் லிங்கத்திற்கு தென்பாகம் கவுதம தீர்த்தம் என்ற திருநாமம் பெற்ற தீர்த்தம் ஒன்று உள்ளது.
அந்த கவுதம தீர்த்தத்திற்கு கடவுளின் ஆணைப்படி அநேக தீர்த்தங்கள் வந்துள்ளன.
அவ்விதமாக தீர்த்தத்தில் கும்ப முனியான அகத்தியர் மற்றய முனி கணங்களுடன், லோபா முத்ரா தேவி சகிதமாக நீராடி வழிபட்டு பிதுர்களுக்கும், தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்தார்.
அதற்கு அப்பால் தென்பாகத்தில் பைசாகமோசனம் என்ற தீர்த்தம் ஒன்று உள்ளது.
அதில் நீராடி வழிபடுவோர் யமபுரியைக் கண்ணால் பார்க்க மாட்டார்கள்.
அதற்கு தென்பக்கத்தில் பரஞ்ஜோதியாக மகாபாவங்களைத் தொலைக்கும் தண்டபாவம் என்று பெயர் பெற்ற புண்ணிய தீர்த்தம் ஒன்று உள்ளது.
அதில் நீராடி வழிபடுவோர் சகல விருப்பங்களையும் இவ்வுலகில் அனுபவித்து முடிவில் முக்தியைப் பெறுகின்றனர்.
அதற்கு தென்பாகத்தில் ஸ்ரீதாமிரபரணியுடன் புண்ணியமான கடனா நதி சேர்கிறாள்.
அந்த கடனா சங்கமத்தில் நீராடி வழிபடுவது விசேஷமான பலனைத் தருகிறது.
இந்த இடத்தில் அந்தர்வாகிணியாக யமுனா நதியும், கடனா நதியும், ஸ்ரீதாமிரபரணியுடன் சேர்வதால் அது முக்கூடல் (தென்திருபுவனம்) என்று கூறப்படுகின்றது.
இம்மூன்று நதிகள் சேரும் திரிவேணி சங்கமத்தில் நீராடி வழிபடுவோன் இவ்வுலகில் சகல விருப்பங்களையும் அனுபவித்து முடிவில் பரமசிவனின் சாயுஜ்யத்தைப் பெறுவான்.
அதற்கு தென்பாகத்தில் சிறப்பான மாண்டவ்ய தீர்த்தம் ஒன்று உள்ளது. அதில் நீராடி வழிபடுவோன் பரிசுத்தமான சத்யலோகத்திற்குச் செல்கிறான்.
தேவேந்திர மோட்ச தீர்த்தத்தின் வட பாகத்தில் விநாயக தீர்த்தம் ஒன்று உள்ளது. இதில் ஒரு தடவையாவது நீராடி வழிபடுவோன் தீர்க்கமான ஆயுளை அடைகிறான்.
சுகமாக வாழ்வான். அதற்கு வடபுறம் நன்மை பல தரும் கர்மதீர்த்தம் ஒன்று உள்ளது. அதைத் தொடுவோர் கர்ம பாசத்தில் இருந்து நீங்கி விடுகின்றனர்.
அதற்கும் சமீபத்தில் வடபாகத்தில் ராட்சசி மோசனம் என்ற சிறந்த தீர்த்தம் உள்ளது. அதைக்கண்டவுடன் மனிதனின் பாவங்கள் எல்லாம் விலகும்.