கிரிக்கெட் (Cricket)

ருமேலி தார்

பரோடா பெண்கள் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக ருமேலி தார் நியமனம்

Published On 2022-07-14 12:40 IST   |   Update On 2022-07-14 12:40:00 IST
  • 38 வயதான ருமேலி தார் 2003 முதல் 2018 வரை இந்திய அணியின் ஆல்-ரவுண்டராக இருந்தார்.
  • இந்தியாவுக்காக நான்கு டெஸ்ட் போட்டிகள் உட்பட 100 சர்வதேச போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார்.

சில வாரங்களுக்கு முன் ருமேலி தார் கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் பரோடா கிரிக்கெட் சங்கத்தின் மூத்த பெண்கள் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

38 வயதான ருமேலி தார் 2003 முதல் 2018 வரை இந்திய அணியின் ஆல்-ரவுண்டராக இருந்தார். அவர் நான்கு வருட அனுபவத்துடன் பிசிசிஐ லெவல் 2 சான்றிதழ் பெற்ற பயிற்சியாளராக உள்ளார். 2003-ல் இங்கிலாந்துக்கு எதிராக சர்வதேச அரங்கில் அறிமுகமான இவர் 2018-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இறுதி ஆட்டத்தில் ஆடினார். 2009 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனையாக இருந்தார்.

இந்தியாவுக்காக நான்கு டெஸ்ட் போட்டிகள் உட்பட 100 சர்வதேச போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். 78 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 961 ரன்களையும், 18 டி20 போட்டிகளில் விளையாடி 131 ரன்களையும் குவித்துள்ளார். நான்கு டெஸ்ட் போட்டிகளில் 29.5 சராசரியுடன் 236 ரன்களை அவர் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News