கிரிக்கெட்

முதல் ஆட்டத்தில் மெதுவாக பந்துவீச்சு: இந்திய அணிக்கு 80 சதவீதம் அபராதம்

Update: 2022-12-06 07:46 GMT
  • குறிப்பிட்ட நேரத்தில் 4 ஓவர்கள் குறைவாக வீசி இருந்தனர்.
  • ஐ.சி.சி. நடுவர் ரஞ்சன் மடுகல்லே நடவடிக்கை எடுத்தார்.

மிர்பூர்:

வங்காளதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. குறிப்பிட்ட நேரத்தில் 4 ஓவர்கள் குறைவாக வீசி இருந்தனர். இதனால் இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

போட்டியில் இருந்து பெறும் பணத்தில் 80 சதவீதம் அபராதம் விதித்து ஐ.சி.சி. நடுவர் ரஞ்சன் மடுகல்லே நடவடிக்கை எடுத்தார்.

Tags:    

Similar News