முன்னோட்டம்
கருப்பு கண்ணாடி படக்குழுவினர்

கருப்பு கண்ணாடி

Published On 2022-02-11 20:27 IST   |   Update On 2022-02-11 20:27:00 IST
PSR Film Factory  தயாரிப்பாளர் PSR பிரதீப் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் நியூட்டன்.ஜி இயக்கும் 'கருப்பு கண்ணாடி' படத்தின் முன்னோட்டம்.
சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகும் புதிய திரைப்படம் “கருப்பு கண்ணாடி”. PSR Film Factory  தயாரிப்பாளர் PSR பிரதீப் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் நியூட்டன்.ஜி இயக்கும் 'கருப்பு கண்ணாடி' படத்தின் படப்பிடிப்பு, இன்று சென்னை, சைதாப்பேட்டை லைட்ஸ் ஆன் ஸ்டுடியோவில் இனிதே துவங்கியது. 

‘கருப்பு கண்ணாடி' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் சைக்கோ த்ரில்லர் பாணியில்,  உருவாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் சுப்ரமணிய சிவா கிளாப் அடித்து துவக்கி வைத்தார். 

கருப்பு கண்ணாடி திரைப்படத்தில் நடிகர் தணிகை, சுப்ரமணிய சிவா, துர்கா, ஜிஜினா, ராஜா சிம்ஹா, காகராஜ், பாடகர் வேல்முருகன், மாப்பு ஆண்ட்ரூஸ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். 

ஒளிப்பதிவாளராக சம்சாத், இசையமைப்பாளராக சித்தார்த்தா பிரதீப், ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

Similar News

13

சீதா ராமம்

மைக்கேல்

விட்னஸ்

கள்ளபார்ட்