கிசுகிசு
கிசுகிசு

அவமானப்படுத்திய இயக்குனர்.... நடிக்க மறுத்த நடிகை

Published On 2022-02-14 22:46 IST   |   Update On 2022-02-14 22:46:00 IST
தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர், தன்னை அவமானப்படுத்திய இயக்குனர் படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம்.
தமிழில் முகமூடி அணிந்து வந்த நடிகை, தற்போது முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடித்து வருகிறாராம். ஒரு காலத்தில் நடிகை நடித்த படங்கள் தோல்வி அடைந்ததால் அவர் அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று இயக்குனர்கள் முத்திரை குத்தி ஒதுக்கினார்களாம். ஆனாலும் நம்பிக்கையோடு சில படங்களில் நடித்து தற்போது அதிர்ஷ்ட தேவதையாக மாறி விட்டாராம்.

முன்னணி இந்தி இயக்குனர் ஒரு காலத்தில் நடிகையை தனது படத்துக்கு ஒப்பந்தம் செய்துவிட்டு பிறகு அவர் அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று நீக்கிவிட்டு வேறு கதாநாயகியை வைத்து படம் எடுத்தாராம். அந்த சம்பவம் நடிகைக்கு வேதனையை ஏற்படுத்தியதாம். இப்போது அதே இயக்குனர் தனது படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுக்கும்படி கெஞ்சிக் கொண்டிருக்கிறாராம்.

ஆனால் நடிகை ஆரம்ப காலத்தில் தன்னை அவமானப்படுத்திய அவரது படத்தில் நடிக்க முடியாது என மறுத்து விட்டாராம்.

Similar News