சினிமா
கிசுகிசு

நடிகரை எச்சரிக்கும் நடிகர்கள்

Published On 2021-08-18 14:31 GMT   |   Update On 2021-08-18 14:31 GMT
பிரபல நடிகர் ஒருவர் தன்னுடைய முயற்சியை பல நடிகர்கள் எச்சரித்து வருகிறார்களாம்.
சினிமாவில் முன்னணி இயக்குனர் படத்தில் நடித்து பிரபலமான நடிகர், தான் பெரிய நடிகராகி விட்டோம் என்று நினைத்து பந்தா காட்ட ஆரம்பித்து விட்டராம். அதன்பின் வந்த பட வாய்ப்புகளை ஓவராக பேசி இழந்தாராம். தற்போது புதிய படத்தில் வில்லனாக நடித்திருக்கும் நடிகர், நான் மாறிவிட்டேன் என்று கூறியிருக்கிறாராம்.

இனிமேல் நல்ல படங்களில் நடிப்பேன், விரைவில் படம் தயாரிக்க போகிறேன் என்று கூறினாராம். இதைக்கேட்ட பல நடிகர்கள் படம் தயாரிக்க வேண்டாம் என்று நடிகருக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்களாம். ஏற்கனவே பல நடிகர்கள் தயாரித்து நஷ்டம் அடைந்திருப்பதால் இப்படி எச்சரிக்கிறார்களாம்.
Tags:    

Similar News