முன்னணி நடிகை ஒருவர், ஒரு பாடலுக்கு நடனம் ஆட கோடி கணக்கில் பணம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு பாடலுக்கு நடனம் ஆட கோடி கணக்கில் பணம் கேட்கும் நடிகை
பதிவு: ஜூலை 28, 2019 17:11
கிசுகிசு
உலக அழகியாக பட்டம் பெற்றவர் தமிழில் சில படங்களில் நடித்து பிரபலமானாராம். இந்தி, படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தாராம். தற்போது முதல் முறையாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறாராம்.
அந்த படத்தில் அவர் முன்னணி நடிகருக்கு ஜோடியாக அறிமுகம் ஆகிறாராம். இதையடுத்து அவர் மற்றொரு தெலுங்கு படத்தில், ஒரு பாட்டுக்கு மட்டும் நடனம் ஆட சம்மதித்துள்ளாராம். இதற்கு சம்பளமாக பல கோடி ரூபாய் கேட்டிருக்கிறாராம்.