சினிமா

கவர்ச்சி படங்களால் பலனில்லை - நொந்து போன நடிகை

Published On 2019-04-01 18:26 IST   |   Update On 2019-04-01 18:26:00 IST
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்த நடிகை ஒருவருக்கு முதல் படத்தில் கிடைத்த வரவேற்பு அடுத்தடுத்த படங்களில் கிடைக்காததால் தற்போது படவாய்ப்பின்றி தவிக்கிறாராம். #Gossip
நிஜத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து பின்னர் குத்துச்சண்டை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானாராம். முதல் படமே வெற்றி பெற்றதால், முன்னணி கதாநாயகியாக வலம் வருவார் என்று எதிர்பார்த்தார்களாம். முதல் பட வெற்றியை தொடர்ந்து நடிகை ஒப்பந்தமான இரண்டு படங்களும் ஓரளவுக்கே வரவேற்பை பெற்றனவாம்.

அதன் பிறகு நாயகிகக்கு பட வாய்ப்புகளே இல்லையாம். அவர் தன்னை விதம் விதமாக கவர்ச்சி படம் எடுத்து அதை பட நிறுவனங்களுக்கு அனுப்பினாராம். இருப்பினும் அவருக்கு புது பட வாய்ப்புகள் வரவில்லையாம். 

இதனால் நொந்து போன நடிகை, தற்போது என்ன செய்கிறார் என்பதே தெரியவில்லையாம். #Gossip

Similar News