சினிமா

சத்தமில்லாமல் அடுத்த பட வேலையை ஆரம்பித்த தயாரிப்பாளரான நடிகர்

Published On 2019-03-04 15:18 IST   |   Update On 2019-03-04 15:19:00 IST
நடிப்பில் இருந்து தயாரிப்பாளராக சமீபத்தில் அறிமுகமான நடிகர் ஒருவர் தனது அடுத்த தயாரிப்பை தனது நண்பரை வைத்து யாருக்கும் தெரியாமல் சத்தமில்லாமல் துவங்கியிருக்கிறாராம். #Gossip
தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகர் சேட்டையான குழுவுடன் பயணம் செய்தாராம். சமீபத்தில் தயாரிப்பாளராகவும் அறிமுகமானாராம்.

வெற்றிக்கு மறுபெயரை கொண்ட இரண்டெழுத்து நடிகரை வைத்து அவர் தயாரித்த படம் வரவேற்பை பெற்றதாம்.

இந்த நிலையில், தயாரிப்பாளரான அந்த நடிகர் அடுத்த படத்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம். அவர்களது கூட்டணியில் இருக்கும் ஆர்.கே.நகரைச் சேர்ந்த மூன்றெழுத்து நடிகரை வைத்த சத்தமே இல்லாமல் புதிய படத்தை துவங்கிவிட்டாராம். இந்த படத்தை பிரபல இயக்குநரிடம் பணிபுரிந்த ஒருவர் இயக்குகிறாராம். #Gossip

Similar News