சினிமா செய்திகள்

பவித்ரா லட்சுமிக்கு என்னதான் ஆச்சு?- கொந்தளிக்கும் ரசிகர்கள்

Published On 2025-07-15 09:30 IST   |   Update On 2025-07-15 09:30:00 IST
  • உடல்நிலை சரியில்லாமல் போனதால் மெலிந்து போய்விட்டேன்.
  • அவருக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

சின்னத்திரையில் நிகழ்ச்சிகளில் கலக்கி வந்த பவித்ரா லட்சுமி, காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பிரபலமானார். 'நாய் சேகர்' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் பவித்ரா லட்சுமி எடை குறைந்து உடல் மெலிந்து போயிருந்தார். இதையடுத்து அவர் முகத்தில் 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்துகொண்டதாகவும், அதனால் பக்க விளைவுகள் ஏற்பட்டு அவதிப்பட்டு வருவதாகவும் பேசப்பட்டன. இதனை பவித்ரா லட்சுமி மறுத்தார். இதற்கிடையில் பவித்ரா லட்சுமியின் தற்போதைய தோற்றத்தை கண்டு அவருக்கு என்னதான் ஆச்சு? என ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள். அதேநேரம் அவருக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

'உடல்நிலை சரியில்லாமல் போனதால் மெலிந்து போய்விட்டேன். இப்போது மீண்டும் உடல்நலம் தேறி வருவதால், உடலில் சதை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு வருகிறது. விரைவில் மீண்டு வருவேன்', என்று பவித்ரா லட்சுமி கூறியுள்ளார்.

Tags:    

Similar News