விரும்பும் நபர்களுக்கு ஓட்டு போடுங்கள், ஆனால்.. நடிகர் பார்த்திபன் வேதனை
- கூட்டநெரிசலில் உயிரிழந்த தனது ஒன்றை வயது குழந்தையின் சடலத்தை பார்த்து அழக்கூட முடியாமல் வாய் பேசமுடியாத காது கேளாத தாய் இடிந்துபோய் அமர்ந்திருந்தார்.
- இறுதி ஊர்வலத்தில் பிய்த்து எறியப்படும் பிஞ்சு பூக்களாய் குழந்தைகளை பலியாக்காதீர்கள்.
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் நேற்று மாலை தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து பிரபலங்கள் பலரும் இரங்ல் மற்றும் தத்தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், கூட்டநெரிசலில் உயிரிழந்த தனது ஒன்றை வயது குழந்தையின் சடலத்தை பார்த்து அழக்கூட முடியாமல் அதிர்ச்சியில் இடிந்து அமர்ந்திருந்த வாய் பேசமுடியாத காது கேளாத தாயின் புகைப்படத்தை பகிர்ந்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவரின் பதிவில், 'கூட்டம்' என்ற ஒற்றை வார்த்தைக்கு பின்…. 10,100,1000,1000000000000000000000 போன்ற பூஜ்ய உயிர்களின் அன்பும், பாசமும், தன்னலமற்ற ஊக்கப்படுத்துதலும், வலியும், வேதனையும் முடிவில் கேள்விக் கேட்பாறற்ற பிணங்களாய் வெள்ளை போர்த்தி, வண்ண மாலை சாத்தி,(இருந்தால்) உறவினர்களின் கண்ணீர் ஆற்றில் கரைக்கச் சொல்லி 'கொடுத்து வைத்தவர்கள்'
ஓட்டு போடுங்கள் - விரும்பும் நபர்களுக்கு, ஆனால் கூட்டம் போடாதீர்கள் - வாழ்வை தொலைக்க! அதிலும்
இறுதி ஊர்வலத்தில் பிய்த்து எறியப்படும் பிஞ்சு பூக்களாய் குழந்தைகளை பலியாக்காதீர்கள்! என்று தெரிவித்துள்ளார்.