சினிமா செய்திகள்

கோடிகளில் சம்பாதித்தாலும் எனக்கும் அந்த பிரச்சனை இருக்கு- விஜய் சேதுபதி

Published On 2025-11-12 09:02 IST   |   Update On 2025-11-12 09:02:00 IST
  • பலரும் கடனை அடைக்கும் அளவுக்கு பணம் வந்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பதாக கூறுகிறார்கள்.
  • வாழ்க்கையை அதன் ஓட்டத்திலேயே வாழ்வது தான் சவால்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, தற்போது மிஷ்கின் இயக்கத்தில் 'டிரெயின்' படத்திலும், பூரி ஜெகநாத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.

இதுதவிர 'பிக்பாஸ்' நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையில் நிகழ்ச்சியில் அவர் பேசிய விஷயம் கவனம் ஈர்த்துள்ளது.

அதில் அவர், ''இந்த விளையாட்டில் பலரும் கடனை அடைக்கும் அளவுக்கு பணம் வந்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பதாக கூறுகிறார்கள். நான் ஆயிரத்தில் சம்பாதித்தபோது அதே ஆயிரத்துக்கு கடன் இருந்தது. லட்சத்தில் சம்பாதித்தபோது அதற்கு தகுந்த கடன் இருந்தது.

தற்போது கோடிகளில் சம்பாதிக்கிறேன், ஆனாலும் அந்த கடன் பிரச்சனை என்னுடன் இருக்கத்தான் செய்கிறது. அதனால் அதனுடனேயே வாழ கற்றுக்கொண்டேன். வாழ்க்கையை அதன் ஓட்டத்திலேயே வாழ்வது தான் சவால்'' என்று விஜய் சேதுபதி பேசினார்.

Tags:    

Similar News