சினிமா செய்திகள்

சினிமாத்துறையில் தயாரிப்பை தாண்டி அடுத்த அத்தியாயத்தில் வேல்ஸ் நிறுவனம்

Published On 2025-10-08 14:08 IST   |   Update On 2025-10-08 14:08:00 IST
  • தற்போது வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன் 2’.
  • பூஜை விழாவிற்காக பிரம்மாண்டமான கோவில் போன்ற செட்டை அமைத்து யாகம் வளர்த்து பூஜை நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் திரைப்படங்களை மிகவும் பிரமாண்டமாக தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்று வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல். அந்நிறுவனம் தயாரிக்கும் படம் என்றாலே பிரமாண்டத்திற்கு குறைவே இருக்காது என்பதால் அப்படம் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.

தற்போது, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் படம் 'மூக்குத்தி அம்மன் 2'. இப்படத்திற்கான பூஜை மிகவும் விமர்சையாக நடைபெற்றது. பூஜை விழாவிற்காக பிரமாண்டமான கோவில் போன்ற செட்டை அமைத்து யாகம் வளர்த்து பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.





இந்த நிலையில், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் திரைத்துறையில் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளது. அதாவது, வேல்ஸ் மியூசிக் நிறுவனத்தை தொடங்கி உள்ளது. மற்ற அனைத்து பெரிய இசை லேபிள் நிறுவனங்களைப் போலவே, வேல்ஸ் மியூசிக் படங்களின் ஆடியோ உரிமைகளையும் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.





வேல்ஸ் மியூசிக் நிறுவன தொடக்க விழாவில் நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். 

Tags:    

Similar News