அருண் - கீர்த்தி பாண்டியன் நடித்த அஃகேனம் படத்தின் டிரெய்லர் வெளியீடு
- அருண் பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடித்திருக்கும் புதிய திரைப்படம் 'அஃகேனம்
- இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர்- தயாரிப்பாளர்- விநியோகஸ்தர் - என பன்முக ஆளுமை கொண்ட அருண் பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'அஃகேனம் ' என பெயரிடப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இயக்குநர் உதய் கே இயக்கத்தில் உருவாகி இருக்கும் ' அஃகேனம் ' எனும் திரைப்படத்தில் அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன், பிரவீண் ராஜா , ஆதித்யா ஷிவ்பிங்க், ரமேஷ் திலக், ஜி. எம். சுந்தர், ஆதித்யா மேனன், சீதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
விக்னேஷ் கோவிந்தராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை திவேத்தியன் கவனிக்க, கலை இயக்கத்தை ராஜா மேற்கொண்டிருக்கிறார். அத்துடன் இந்த படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் 'அஃகேனம்' படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தில் கீர்த்தி பாண்டியன் ஒரு டாக்சி டிரைவர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் ஜுலை 4 ஆம் தேதி வெளியாகிறது.
பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ & பி குரூப்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் தயாரித்திருக்கிறார்.