சினிமா செய்திகள்
ஷேன் நிகாம், சாந்தனு நடித்துள்ள பல்டி படத்தின் டிரெய்லர் வெளியானது
- பல்டி படத்தை அறிமுக இயக்குனர் உன்னி சிவலிங்கம் இயக்குகிறார். .
- இப்படத்தில் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஷேன் நிகாம், செல்வராகவன், அல்ஃபோன்ஸ் புத்திரன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் பல்டி. இப்படத்தில் ஷேன் நிகாமுக்கு ஜோடியாக ப்ரீதி நடிக்கிறார்.
இப்படத்தை அறுமுக இயக்குனர் உன்னி சிவலிங்கம் இயக்குகிறார். இப்படத்தில் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
தயாரிப்பாளர் சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இந்நிலையில், பல்டி படத்தின் டிரெய்லர் வெளியானது. சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படம் மலையாளம் மற்றும் தமிழில் வரும் 26ம் தேதி வெளியாகிறது.