சினிமா செய்திகள்

ராமாயணம் படத்தின் கவுண்டவுன் தொடங்கி விட்டது ! : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமாவின் டிரெய்லர் வெளியானது!!

Published On 2025-01-11 17:22 IST   |   Update On 2025-01-11 17:22:00 IST
  • இந்த டிரெய்லர் வியக்கவைக்கும் விஷுவல்கள் மற்றும் அதிர வைக்கும் போர் காட்சிகளைக் காட்டுகிறது,
  • தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா” படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.

இந்தியாவெங்கும் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும், "தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா" படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஆதிகால பாரம்பரிய புராணத்தின் மறுவடிவம், வால்மீகியின் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு மீளுருவாக்கம் செய்யப்பட்ட காட்சி அற்புதம், விரைவில் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது.

இந்த டிரெய்லர் வியக்கவைக்கும் விஷுவல்கள் மற்றும் அதிர வைக்கும் போர் காட்சிகளைக் காட்டுகிறது, இளவரசர் ராமரின் பிறந்த இடமான அயோத்திக்கு, பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது; மிதிலா, அங்கு அவர் சீதையை மணந்தார்; இளவரசர் ராமர் தனது வனவாசத்தை சீதை & லக்ஷ்மணருடன் கழித்த பஞ்சவடி காடு மற்றும் லங்கா, ராமர் மற்றும் மன்னன் ராவணன் இடையே நடந்த புகழ்பெற்ற மோதலின் போர்க்களம், என ராமாயணத்தின் முக்கிய அங்கம் அனைத்தும், ஜப்பானிய அனிம் பாணியில், அழகாக வழங்கப்பட்டுள்ளன.

யுகோ சகோவால் உருவாக்கப்பட்டு & கொய்ச்சி சசாகி மற்றும் ராம் மோகன் இயக்கி வரும் இந்தத் திரைப்படம், 450 இந்திய -ஜப்பானியக் கலைஞர்கள் இணைந்து, கிட்டத்தட்ட 100,000 கையால் வரையப்பட்ட செல்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. ஜப்பானியக் கலை நுணுக்கத்தை, இந்தியாவின் காலத்தைக் கடந்த கதைசொல்லலுடன் பாரம்பரியத்தை இணைக்கும் ஒரு தலைசிறந்த காட்சி அனுபவமாக இப்படைப்பு உருவாகியுள்ளது.

கீக் பிக்சர்ஸ் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மோக்ஷா மோட்கில் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியுள்ளதாவது…, "இந்தப் படம் இதுவரை சொல்லப்பட்ட மிகச் சிறந்த கதைகளில் ஒன்றிற்கு அஞ்சலி செலுத்துகிறது. "இந்தியாவில் உள்ள நம்மில் பலருக்கு, இந்தப் படம் நம் குழந்தைப் பருவத்தில் மறக்க முடியாத பகுதியாக இருந்து வருகிறது, இப்போது மீண்டும் திரையரங்குகளில் அந்தக் கதையைக் கொண்டு வருவதன் மூலம், நம் குழந்தைப் பருவத்தின், மிகவும் பிடித்தமான ஒரு வழிபாட்டு முறையைப் பற்றிய அழகான மறுமலர்ச்சியாக இருக்கும். புதிய தலைமுறைக்கு இதை அனுபவிக்கத் தருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஜனவரி 24 ஆம் தேதி குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து இப்படம் பார்த்து மகிழுங்கள்!"

கீக் பிக்சர்ஸ் இந்தியா, AA ஃபிலிம்ஸ் மற்றும் எக்செல் என்டர்டெயின்மென்ட் மூலம் நாடு முழுவதும் திரையரங்குகளில் விநியோகிக்கிறது. இப்படம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் முதன்முறையாக 4k இல் இந்தப் படம் வெளியாக உள்ளது.

Full View

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News