சினிமா செய்திகள்

விழித்தெழு படக்குழு

ஆன்லைன் சூதாட்டத்தை அம்பலப்படுத்தும் 'விழித்தெழு' திரைப்படம்

Published On 2022-12-08 12:24 IST   |   Update On 2022-12-08 12:24:00 IST
  • இயக்குனர் தமிழ்செல்வன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'விழித்தெழு'.
  • ஆன்லைன் சூதாட்டத்தை மையக்கருத்தாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

இயக்குனர் தமிழ்செல்வன் இயக்கத்தில் ஆதவன் சினி கிரியேஷன் தயாரிப்பில் சார்பில் சி.எம்..துரை ஆனந்த் தயாரித்துள்ள படம் 'விழித்தெழு'. இணையதள மோசடியை மையக்கருத்தாக கொண்டு உருவாகியுள்ள இந்த ப்டத்தின் கதாநாயகனாக முருகா அசோக், கதாநாயகியாக காயத்ரி ரெமோ நடித்துள்ளனர்.

மேலும் பருத்திவீரன் சுஜாதா, சரவணசக்தி, வினோதினி, வில்லு முரளி, ரஞ்சன், சேரன் ராஜ், மணிமாறன், சாப்ளின் பாலு, சுப்பிரமணியபுரம் தனம் ,நெஞ்சுக்கு நீதி திருக்குறளி, காந்தராஜ், அறிமுகம் லட்டு ஆதவன், கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விழித்தெழு படத்தின் இசையமைப்பாளராக நல்லதம்பியும், படத்தொகுபாளராக எஸ்.ஆர்.முத்துக்குமார் பணியாற்றியுள்ளனர். இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

Tags:    

Similar News